தூக்கு மேடையிலிருந்து 26பேரின் உயிரை மீட்ட மூத்த வழக்கறிஞர் என். நடராசன் மறைவு!
நீதித்துறைக்குப் பேரிழப்பாகும்!பழ. நெடுமாறன் இரங்கல்26 தமிழர்கள் உயிர்க் காப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தியின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்ற 26 தமிழர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடி 19பேர் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படுவதற்கும், மீதமுள்ள 7பேர் இன்று உயிருடன் இருப்பதற்கும் காரணமான மூத்த வழக்கறிஞர் என். நடராசன் அவர்கள் காலமான செய்தி ஆழ்ந்த துயரத்தைத் தருகிறது.
இராசீவ் கொலை வழக்கு தடாச் சட்டத்தின் கீழ் போடப்பட்டதே செல்லத்தக்கதல்ல என்பதை உச்சநீதிமன்றத்தில் தனது வாதத் திறமையால் நிலை நிறுத்திய பெருமைக்குரியவர் மூத்த வழக்கறிஞர் என். நடராசன் ஆவார்.
அவரின் மறைவு நீதித் துறைக்கும், தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். அவரின் துணைவியாருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.ஐயா பழ.நெடுமாறன்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த மூத்த வழக்கறிஞர் நடராஜன் அவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.