chennireporters.com

இளைய தளபதி விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் ஐகோர்ட் உத்தரவு.

நடிகர் விஜய் 2012ம் ஆண்டு இங்கலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய் கார் ஒன்றை வாங்கியிருந்தார்.

இந்த காருக்கு நுழைவு வரியை கட்டாமல் இருந்தார் இது தொடர்பாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது மேலும் நடிகர்கள் நிஜ ஹீரோவாக இருக்கவேண்டும்.

ரீல் ஹீரோவாக இருக்க கூடாது என்றும் மேலும் ஒரு லட்ச ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சமூக நீதிக்காக பாடுபடும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாதுஎன்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க.!