விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுக்களாக நடைபெற்ற நிலையில், சுற்றுகள் வாரியாக வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் குறித்து தெரிந்து கொள்வோம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஜூலை 13 ஆம் தேதியான இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, சுமார் 2 மணி அளவில் நிறைவு வெற்றது.
வாக்காளர்கள்: விக்கிரவாண்டி தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர் 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 82.48 சதவிகித வாக்குகள் பதிவாகியது. வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கியது முதலே, திமுக முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில் 20 சுற்றுகள் முடிவுகள் வெளியான நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவுகள்: 20 சுற்றுக்கள்
இந்நிலையில், 20 சுற்றுக்களாக வாக்கு எண்ணப்பட்ட நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் முக்கிய 3 கட்சிகளான திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளன என பார்ப்போம்.
முதல் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 5,564, பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 2,894,நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 303
இரண்டாம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 6438, பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 3010,நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 546
மூன்றாம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 6055,பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 1419,நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 534
நான்காம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 6114, பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 1502, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 380
ஐந்தாம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 6980 பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 2658 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் -512
ஆறாம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 7403 பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 2173 , நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 903
ஏழாம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 7568, பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 2,894, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 303
எட்டாம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 6787, பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 2453,நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 631
ஒன்பதாம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 5916, பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 4318, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 517
பத்தாம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 5722, பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 3715, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 561.
பதினொன்றாம் சுற்று; திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 6651, பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 2576, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 653.
பன்னிரெண்டாம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 6837, பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 2632, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 504.
பதிமூன்றாம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 6738, பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 3188, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 392.
பதினான்காம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 5546, பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 2734, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 461.
பதினைந்தாம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 6015, பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 4192, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 424.
பதினாறாம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 5185, பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 2601 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 527.
பதினேழாம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 6731, பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 2355, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 868.
பதினெட்டாம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 6763, பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 2331, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 646.
பத்தொன்பதாம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 4966, பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 2984, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 390.
இருபதாம் சுற்று: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் – 4558, பாமக வேட்பாளர் சி. அன்புமணி பெற்ற வாக்குகள் – 2588, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் – 349.
இறுதி முடிவுகள்: 20 சுற்றுகள் முடிவுற்ற நிலையில், வேட்பாளர்கள் மொத்தமாக பெற்ற வாக்குகளின் விவரங்கள்:
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகளை பெற்றுள்ளார்.பாமக வேட்பாளர் அன்புமணி 56,296 வாக்குகளை பெற்றுள்ளார்.நாம் தமிழர் அபிநயா 10,602 வாக்குகள் வாக்குகளை பெற்றுள்ளார். .திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.