chennireporters.com

#watch vanangaan film with social concern; மக்கள் சமூக அக்கறையுடன் வணங்கான் படத்தை பார்க்க வேண்டும்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், பாலா இயக்கத்தில், அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், ரிதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வணங்கான்”.வணங்கான்' படத்தின் வெற்றி; பாலா குறித்து நெகிழ்ந்த நடிகர் அருண் விஜய்! | The success of Vanangan Actor Arun Vijay emotional note about director bala - kamadenu tamilஉலகையே நடுங்க வைத்த சுனாமி பேரலையின் போது பெற்றோரை இழந்து, அனாதையாக திரியும் அருண் விஜய் ( கோட்டி ), அதேபோல் அழுது கொண்டிருக்கும் பெண் குழந்தைக்கு ஆதரவு கொடுத்து, தன் தங்கையாக வளர்க்கிறார். இவருக்கு காது கேட்காது, வாய் பேசவும் முடியாது. ஆனால் பயங்கரமான முன் கோபக்காரர். இவர்கள் இருவருக்கும் பாதிரியார் ஆதரவாக இருக்கிறார். தன் கண்முன்னே தவறு நடந்தால் உடனடியாக தட்டிக்கேட்கும் சுபாவம் கொண்ட இவர், ஊர் வம்பு வேண்டாம் என ஆதரவற்றோர் இல்லத்தில் வேலை வாங்கித் தருகிறார் பாதிரியார்.அங்கு பார்வையற்ற பெண்கள் குளிப்பதை மூன்றுபேர் பார்த்து ரசிக்கிறார்கள். அதை உணர்ந்த பெண்கள் கதவை பூட்டி விட்டு அருண் விஜயிடம் தகவல் கூற, அதில் இருவரை கொடூரமான முறையில் கொலை செய்கிறார். பின்னர் தானாகவே போலீஸில் சரணடைகிறார். எதற்காக கொலை செய்தார் என்பதை போலீசாரிடம் கூற மறுக்கிறார். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் ஒருவரை கொலை செய்கிறார். எதற்காக கொலை செய்தார் என்கிற காரணத்தைத் தேடி போலீஸாரிடம் சொல்ல மறுக்கிறார்.அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் ஒருவரை கொலை செய்கிறார். எதற்காக கொலை செய்தார் என்கிற காரணத்தைத் தேடி போலீஸாரிடம் சொல்ல மறுக்கிறார். போலீஸார் கொலைக்கான காரணத்தை தேடி கண்டுபிடித்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை…Arun Vijay with director Balaபாலா இயக்கத்தில் ஏற்கனவே விக்ரம் பிதாமகன் படத்தில் ஏற்று நடித்த சித்தா கதாப்பாத்திரம் தான் வணங்கானில் கோட்டி கதாப்பாத்திரம். நடை, உடை, பாவனை அனைத்தும் பிதாமகன் சாயலில் அப்படியே அச்சு பிசகாமல் நடித்திருக்கிறார் அருண் விஜய். இந்த படத்தின் மூலம் நல்ல நடிகராக உருமாறி இருக்கிறார் அருண் விஜய். அவரது நடிப்பில் வெளிவந்துள்ள எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்பார்ப்பு இந்தப் படத்திற்கு இருந்தது.

வழக்கமான பாலா படங்களுக்கு ஒருவித எதிர்பார்ப்பு ஏற்படும். ஆனால் இந்தப் படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதுமைகள் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு பாலா படம் வெளியாவதால், பாலாவுக்காக தியேட்டருக்கு வரும் கூட்டம் குறையவில்லை என்றாலும், மிஞ்சியது ஏமாற்றமே. சமுத்திரக்கனி வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மிஷ்கின் இந்தப் படத்தின் மூலம் நடிப்பில் தேரியிருக்கிறார்‌. கதாநாயகி, தங்கை கதாப்பாத்திரம் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

`வன்முறை என்பது எனது இரத்தத்தில் இருக்கிறது!” – இயக்குநர் பாலா

அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் “வணங்கான்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இத்திரைப்படத்தின் ‘நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அருண் விஜய் பேசுகையில், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய திரை உலக பயணத்தில் ‘வணங்கான்’ திரைப்படம் ஒரு மைல்கல் திரைப்படமாக அமைந்ததற்கு இயக்குநர் பாலா சாருக்கு நன்றி. ஒரு நடிகனாக, படம் முழுவதும் பேசாமல் மக்கள் மனதில் இடம்பெற முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்து, என் மேல் நம்பிக்கை வைத்து, இந்த படத்தை தயாரித்ததற்கு நன்றி. எனது நடிப்பையும் இந்த திரைப்படத்தையும் பற்றி இன்று அனைவரும் பாராட்டுகிறார்கள் என்றால் அதற்கு முழு காரணமும் பாலா சார் தான்.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிக்கும் செயல்முறை மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது. செய்கை மொழியை கற்றுக் கொண்ட விதம், உடல் மொழியை மாற்றிக் கொண்ட விதம், எனது கதாபாத்திரத்திற்குள் என்னை ஆழமாக கொண்டு சென்ற விதம் என இவை அனைத்தையும் பாலா சார் வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் செய்திருக்க முடியாது. இந்த எல்லா பாராட்டுகளும் பாலா சாருக்கே போய் சேரும். என்னுடைய வாழ்க்கையில் இது போன்ற மற்றொரு படத்தை மறுபடியும் நடிக்க முடியுமா? என எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் இது போன்ற ஒரு படத்தை பாலா சாரினால் மட்டுமே கொடுக்க முடியும்.” எனக் கூறினார்.
Director Bala
Director Bala

இதனைத் தொடர்ந்து இயக்குநர் பாலா பேசுகையில், “வன்முறை என்பது எனது இரத்தத்தில் இருக்கிறது. திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், சென்னை போன்ற பல இடங்களை இப்போதைய திரைப்படங்கள் கதைக்களமாக கொண்டு எடுக்கப்படுகின்றன. அதனால் தான் கன்னியாகுமரியை கதைக்களமாகக் கொண்டு இத்திரைப்படத்தை எடுத்தேன்.

இத்திரைப்படத்தின் நேரம் 2 மணி நேரம் 5 நிமிடம். இந்த திரைப்படத்தில் செகண்ட் ஆப் காட்சிகள் மிகவும் வேகமாக செல்லும். அதனால் இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது மிகவும் சிறிய படம் போல தெரிகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் நிகழ்வு சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். அதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. பேசிப் பேசிதான் திரைப்படத்தின் கதையை புரிய வைக்க முடியும் என நினைக்கும் இந்த காலத்தில், பேசாமலும் கதையை புரிய வைக்க முடியும் என காட்டுவதற்காக எடுத்த ஒரு முயற்சி தான் இந்த திரைப்படம். குற்றம் செய்பவர்களுக்கு இத்திரைப்படத்தில் காட்டிய தண்டனையை விட இன்னும் கூடுதலான தண்டனை வழங்க வேண்டும் என்பது எனது ஆசை. ” என்றவர், “குற்றப் பரம்பரை கதையை நான் திரைப்படமாக எடுக்கப் போவதில்லை.Vanangaan Vanangaan

மாற்றுத்திறனாளிகளின் உலகத்தை காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற திரைப்படங்களை எடுக்கிறேன். அவர்களை சும்மா பார்த்துவிட்டு, பரிதாபப்பட்டுவிட்டு ஒதுங்கி விடக்கூடாது. நமக்குள் தான் அவர்களும் வாழ்கிறார்கள். நம்மை நம்பி தான் அவர்களும் வாழ்கிறார்கள். அதைக் காட்ட வேண்டியது நம்முடைய கடமை.” எனக் கூறினார்.

இதையும் படிங்க.!