chennireporters.com

திருத்தணி முருகன் கோயில் கருவறையில் சி.சி.டி.வியை மறைக்க காரணம் என்ன நடவடிக்கை எடுக்குமா அரசு.?

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் இரண்டு ஐயர்கள் சிசிடிவி கேமரா வை துணியை வைத்து மறைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்ககூடிய கோவிலில் பாதுகாப்பு கருதி வைக்கப்பட்ட கேமராக்களை மறைப்பது சட்டப்படி குற்றம் ஆகும்.

ஆனால் அங்கு பணிபுரியும் ஐயர்கள் அங்குள்ள கேமராக்களை மறைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பலரும் ஏன் ஐயர்கள் சி.சி.டி.வி யை மறைக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக கோயிலில் உள்ள நகை, பணம் போன்றவற்றை திருடுவதற்காகத் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று முருக பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது போன்ற செயல்பாடுகளில் ஐயர்கள் ஈடுபடுவதால் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அரசின் சட்டத்தை ஐயர்கள் எதிர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

குறிப்பாக கருவறை மற்றும் கோயிலின் முக்கியமான பகுதிகளில் பிராமணர்கள் மட்டுமே செல்ல முடியும் என்பதால் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் வைக்கின்றனர்.

மேலும் கோவில் நகை திருட்டு என்பது தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

உதாரணமாக கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் திருட்டு தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பாபநாசம் பாபநாச சுவாமி திருக்கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு என தொடர்ந்து நடந்து வருகிறது.

மேலும் திருத்தணி முருகன் கோயில் தங்க விமான செய்யப்பட்டதிலும் முறைகேடு நடந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பல மேடை பேச்சில் தினந்தோறும் கடவுளுடன் பூஜையில் ஈடுபடுவது ஐயர்கள் தான் அவர்களுக்கு தெரியாமல் சிலைகள் எப்படி திருடு போகிறது என்று கேள்வி எழுப்பி வருகிறார்.

அது தவிர காணாமல் போன சிலைகள் பற்றி ஏன் கோயிலில் பணியாற்றும் குருமார்கள் புகார் அளிக்கவில்லை என்ற கேள்வியும் அவர் அடிக்கடி எழுப்பி வருகிறார்.

இந்த நிலையில் தான் திருத்தணி முருகன் கோயிலில் சிசி டிவியை குருக்கள் துணி வைத்து எதற்கு மூடினார்கள் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து திருத்தணி முருகன் கோயில் செயல் அலுவலரை நாம் தொடர்பு கொண்டு அவரது கருத்தை அறிய முயன்றோம்.அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை.

அது குறித்து அவர் விளக்கம் அளித்தால் அதை நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதன் பிறகாவது திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் நகைகள் ஆபரணங்கள் எவ்வளவு இருக்கிறது அதன் மதிப்பு எவ்வளவு என்பதை கோயில் நிர்வாகம் வெளியிட வேண்டும் என்று முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க.!