chennireporters.com

கோயம்பேடு மேம்பாலத்தில் கார் தீ பிடித்ததற்கு காரணம் என்ன?

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இன்று மதியம் ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது அதிலிருந்து ஓட்டுநர் காரிலிருந்து குதித்து உயிர் தப்பினார்.

காரில் பயணம் செய்த பெண்மணி காரிலிருந்து இறங்க முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தார்.

இது தொடர்பாக கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரைவர் உடனடியாக கார் கதவைத்திறந்து இறங்கிய போது காரில் பயணம் செய்த அந்தப் பெண்மணி இறங்க முடியாததற்கு காரணம் என்ன?

வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட தீ விபத்தா அல்லது ஏதேச்சையாக நடந்ததா?இல்லை என்றால் அவர் கதவை திறக்க முடியாதபடி ஓட்டுநர் கதவை ஆட்டோமேட்டிக் லாக் போட்டு இருந்தாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நின்று படம் எடுத்தார்களே தவிர ஒருவர் கூட தீய அணைக்க முயலவில்லை கார் முற்றிலும் எரிந்து விட்ட பிறகே தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த தீ விபத்து பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க.!