chennireporters.com

#dmk’s defeat; திமுக தோல்விக்கு காரணம் என்ன? கே.எஸ். ராதாகிருஷ்ணன் விளக்கம்.

திமுகவின் மூத்த தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்து அரசியல் செய்தவர். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் தலைமையில் திமுக செயல் படத் தொடங்கிய பொழுது ஸ்டாலின் உடன் நெருக்கமாக இருந்து வழி நடத்திச் சென்றவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இந்த நிலையில் திடீரென கே எஸ் ராதாகிருஷ்ணன் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதிலிருந்து  ராதாகிருஷ்ணன் திமுகவிற்கு எதிராகவும் பழைய வரலாற்று சம்பவங்களையும் தனது முகநூல் பதிவில் தொடர்ந்து எழுதி வந்தார்.File:K.S Radhakrishnan.jpg - Wikimedia Commonsகே.எஸ். ராதாகிருஷ்ணன்.

திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியை வளர்க்க என்ன செய்ய வேண்டும் எப்படி வழிநடத்திச் செல்ல வேண்டும் என பல கட்சியின் முக்கிய செய்திகளையும் பழைய சம்பவங்களையும் தொடர்ந்து எழுதி வந்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்றதற்கு காரணம் என்ன என்று தற்போது கே.எஸ். ராதாகிருஷ்ணன் 13 விஷயங்களை குறிப்பிட்டு தனது முகநூல் பதிவில் எழுதியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை நாம் நமது வாசகர்களுக்கும் திமுகவினருக்கும் அப்படியே பதிவு செய்கிறோம்.

திமுக தோற்றதற்கு காரணம் என்னவென்று மு‌.க.ஸ்டாலின் கேட்டு இருந்தார். ஒரு பழைய தி.மு.க காரனாக அதற்கான காரணத்தை கூறுகிறேன்.
Tamil Nadu MP's tweet in emojis sparks war of words between EPS, M K Stalin  | Chennai News - The Indian Expressமு‌.க.ஸ்டாலின்.
1. உதயநிதியை துணை முதல்வராக ஆக்க காட்டிய அவசரம். கலைஞர் போல பொறுமையாக இருந்து இருக்கலாம்.
2.  RED GIANT என்னும் பெயரில் சினிமாவை ஆட்சி செய்ய நினைத்தது.
3.  RED GIANT நிறுவனத்தை இன்ப நிதியை நிர்வகிக்க செய்தது
4.  G Square என்னும் பெயரில் மருமகனை வைத்து Pen ஆட்டம் போட்டது. அவரை பெரிய ராஜ தந்திரிமயாக காட்ட நினைத்தது.
5. அனுபவம் மிக்க அமைச்சர்கள் எல்லாம் செய்தியாளர்களிடமும், பொது மக்களிடமும் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது.
6. இந்து மதத்தில் இருக்கின்ற சாதி பேதங்களை எதிர்க்கிறோம் என்று கூறாமல் ஒத்துமொத்தமாக எதிர்க்கிறோம் என்று காட்டிக் கொண்டது!!
7. அதிமேதாவிகள் போல பேசும் செய்தி தொடர்பாளர்களை விவாதங்களில் பங்கேற்க வைத்தது.
8. போதைபொருள் நடமாட்டத்தை சரிவரி தவிர்க்க தவறியது.!!
9. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்க தவறியது.
10.  திமுகவினரை மதிக்காமல், அதிமுகவில் இருந்து வந்தவர்களை நம்பி மதித்து முதல் மரியாதை கொடுத்தது.
11. இறுதி மற்றும் முக்கியமான விஷயம், வைகோவை கூட்டணியில் சேர்த்தது.
12. போதைப் பொருள்,பட்டப்பகல் கொள்ளைகள் , கொலைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நிலை, காவல் மரணங்களை் என்று சட்ட ஒழுங்கு சீர்கெட்டது என பல குற்றச்சாட்டுகள்…..
13.  ஊடகங்களை மிரட்டி விலை கொடுத்து ஊமை ஆக்கப்பட்டது.
Udhayanidhi Stalin - Wikipedia  உதயநிதி.
இந்த பதிவிற்கு பொது மக்கள் பலர் தங்கள்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதையும் நாம் நமது வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
கே.எஸ். ராதாகிருஷ்ணனின் பதிவுக்கு வந்த பதில் கருத்துக்கள்.
கதிரேசன் யோகனந்தன் என்பவர் தனது கருத்தாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொதுவாக ஒரு முதல்வராக ஸ்டாலின் அவர்களுக்கு அவரின் பணிகளுக்கு எப்போதும் நற் பெயரே இருந்து வந்தது.., அமைச்சர்களில் சிலர் பொது வெளிகளில் நல்ல முறையில் கண்ணியத்துடன் நடந்துகொண்டு வந்துள்ளார்கள் – தங்களின் துறையில் கடமையில் முழுப் பணி ஆற்றியுள்ளர்கள். M. Karunanidhi - Movies, Biography, News, Age & Photos | BookMyShow
கருணநிதி.
ஆனால் அமைச்சர்கள் பலரின் அணுகுமுறையும் பேட்டிகளின் போது ஆணவ பேச்சும் , அதை விட அனைத்து துறைகளிலும், பொருள் வழங்கல்களிலும், கோவில் துறைகளிலும், மேல் மட்டத்தில் இருந்து அடி மட்டம் வரை 90% அதிகாரிகள் ஆடிய ஆட்டம், காசே கண்ணாயினார் என்ற பழக்க வழக்கமும் அரசுக்கு கெட்ட பெயரை வாரி வழங்கிவிட்டது..
Inban Udhayanidhi mark his acting debut in Mari Selvarajs nextஇன்பநிதி.
மற்றோர் விஷயம், அனைத்து மக்களுக்கும் பொதுவான அரசமைப்பில் இருப்பவர்கள், அரசு நடத்துவதற்கு சம்பந்தம் இல்லாத, மத விசயங்களை அடிக்கடி தொட்டுப் பேசி , தன் தினசரி வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடு நிலை இந்துக்களின் மனதில் சஞ்சலத்தையும் வெறுப்பையும் கொண்டு வந்தது..

இதையும் படிங்க.!