chennireporters.com

தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரிசெய்யப்படும் வாட்ஸ்அப்.

வாட்ஸ்அப்பில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்படும் என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பயனாளிகளுக்கு சேவைகளைத் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

இரவு 9.10 மணி முதல் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் சேவைகள் முடங்கியது.

எங்களது பயனாளிகள் முகநூல் செயலியை பயன்படுத்துவதில் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.இந்த கோளாறை முடிந்தவரையில் விரைவாக சரி செய்ய முயன்று வருகிறோம்.

பயனாளிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் முகநூல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

எட்டு மணி நேரத்திற்கு பிறகு சமூக வலைத்தளங்களின் அனைத்து சேவைகளும் வழக்கம் போல் இயங்க தொடங்கின

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!