chennireporters.com

சசிகலாவை பார்த்ததும் கதறி அழுத ஓ.பி.எஸ்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி அவர்கள் கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு. சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அவர் மாரடைப்பால் காலமானார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அதேபோல அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்குச் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு ஆறுதல் கூறி வந்தனர்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகிய இருவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

அவருடன் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அமைச்சர்கள் துரைமுருகன்,தங்கம் தென்னரசு, சேகர்பாபு, எம்.எல்.ஏ.உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்றனர்.

அவர்களும் பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினர் அதனைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உட்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு ஆறுதல் கூறி சென்றனர்.

மருத்துவமனை திடீரென்று பரபரப்பானது காரணம் மருத்துவமனைக்கு சசிகலா வருகிறார் என்ற தகவல் வந்ததும் அங்கு பதட்டம் தொற்றிக்கொண்டது. சசிகலா அவர்கள் மருத்துவ மனைக்கு நேரில் வந்து பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது மனைவியின் உடலுக்கு சசிகலா அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பன்னீர்செல்வத்தின் கைகளைப்பிடித்து ஆறுதல் சொன்னவுடன் பன்னீர்செல்வம் கதறி அழ ஆரம்பித்து விட்டார் சசிகலா வருவார் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

சசிகலா நேரில் வந்து தனது மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலா வரப் போகிறார் என்கிற தகவல் கிடைத்தவுடன் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் ஹாஸ்பிடலில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். இறந்த விஜயலட்சுமியின் உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க.!