திருவள்ளூர் அருகே சென்னை பிரிடென்சி கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநில கல்லூரி மாணவர் குமார் என்பவரை ராகிங் செய்து அடித்து உதைத்தனர்.இதில் மனமுடைந்த மாணவர் குமார் திருவள்ளூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுக்கா குருவராஜப்பேட்டை சேர்ந்தவர் குமார்(22) இவர் மாநிலக் கல்லூரியில் முதுகலை வரலாறு துறையில் முதலாமாண்டு படித்து வருகின்றார்.
குமார் வழக்கம்போல் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று விட்டு கல்லூரி முடிந்ததும் புறநகர் ரயிலில் மூலம் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
அப்போதுதிருநின்றவூர் அருகே ரயில் வரும்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சில குமாரை பிடித்து சென்று கேலி செய்து அடித்து அவமானம் செய்ததாக கூறப்படுகிறது இதனால் குமார் சக மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஆடியோ ஒன்றை பதிவு செய்து வாட்ஸ்அப்பில் அனுப்பி உள்ளார்.
அதில் பச்சையப்பாஸ் காலேஜ் மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையில் நான் உயிர் வாழ விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.அதன் பிறகு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்ததும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த வந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஒன்றுகூடி குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க போவதில்லை என சக கல்லூரி மாணவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவம் கல்லூரி மருத்துவமனையில் முற்றுகையிட்டனர்.
அங்கு மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் குற்றவாளிகளை விரைவில் கைது செய்யப் படுவதாகவும் உறுதி அளித்ததால் அவர்கள் சடலத்தை வாங்க ஒப்புக்கொண்டனர்.
இதனால் திருவள்ளூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பாக காணப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே போலீசாரிம் கேட்ட போது தண்டவாளத்தை கடக்கும் போது பலியானதாகவும் மேலும் வெளிவந்துள்ள ஆடியோவை குறித்தும் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
கல்லூரி மாணவர்கள் ரேகிங்க்கு அரசு எப்போது முற்றுப்புள்ளி வைக்கும்.