chennireporters.com

ராம ஜெயத்தை கொலை செய்தது யார்? ரவுடி சி.டி.மணி ஒப்புதல் வாக்குமூலம்.

ramajayam
திருச்சி ராமஜெயம்

அமைச்சர் கே.என். நேருவின் தம்பி திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் பிரபல ரவுடி சி.டி. மணிக்கு தொடர்பு இருப்பதாக சென்னை போலீசார் விசாரணையை முடிக்கி விட்டுள்ளனர்.

மணி நேற்று நள்ளிரவு முட்டுகாடு கடற்கரை பகுதியில் தனது கூட்டாளிகளுடன் மது குடித்து கொண்டிருந்த போது தேனாம்பேட்டை சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த தியாகராஜன் தலைமையில் கொண்ட போலீசார் துப்பாக்கி முனையில் சி.டி.மணியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் சி.டி.மணியை‌ ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சி.டி. மணி

சிக்க போகும் முக்கிய புள்ளிகள் யார்.?

ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய புள்ளி ஒருவர் சிக்க போகிறார் என்ற தகவலை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது கே.என். நேரு வின் தம்பி ராமஜெயம் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி திருச்சியில் நடை பயணம் செல்லும் போது கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. சி.பி.ஐ ஆகியவை விசாரித்தன ஆனால் ராமஜெயம் கொலை வழக்கில் 9 ஆண்டுகளாக எந்த மர்ம முடிச்சும் அவிழ்க்க படாமல் இருக்கிறது ஏனெனில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முக்கிய புள்ளி ஒருவருக்காகவே ராமஜெயம் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டு வந்தது.

அதனாலேயே கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இந்த வழக்கில் துளிகூட முன்னேற்றம் ஏற்படாமல் இருந்து வந்தது தற்போது மீண்டும் திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் ராமஜெயம் கொலை வழக்கு தூசு தட்டி விசாரணையை துவக்கி உள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று நள்ளிரவு பிரபல ரவுடி சி.டி.மணியை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் சி.டி.மணி ஒரு சில முக்கிய அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பெயரையும் சில வழக்கறிஞர்கள் பெயரையும் சொன்னதாக போலீசார் கூறுகின்றனர்.

இன்னும் இரண்டு நாட்களில் ராமஜெயத்தை கொலை செய்த உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை போலீசார் கண்டு பிடித்து விடுவார்கள் என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

சி.டி. மணி சென்னையில் தீர்க்கப்படாமல் சிக்கலில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் மேட்டர்களில் துப்பாக்கி முனையில் பஞ்சாயத்து பேசி தீர்த்து வைப்பாராம்.

சி.டி.மணி தி.மு.க.வில் பல அரசியல் மற்றும் பிசினஸ் விரோதிகள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தான், தான் இருக்கும் இடத்தை போட்டு கொடுத்து விட்டதாக மனி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர. பல லட்சம் மதிப்புள்ள சி.டி.மணியின் சொத்துகள் சிங்கப்பூர் மலேஷியா போன்ற நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க.!