chennireporters.com

மகுடம் சூடப்போவது யார்?

தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த நகர் புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு நாளை தொடங்குகிறது.

வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவர்களின் கவனிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அது என்ன என்பதை அரசியல் கட்சி பிரமுகர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

1.வாக்கு எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு துவங்குவதால் , அதற்கு முன்னதாகவே காலை 7.00 மணிக்கே மையத்திற்கு சென்று விடவேண்டும் .

2.வாக்கு எண்ணும் மையத்திற்க்குள் ஒவ்வொரு வார்டாக வாக்குகள் எண்ணப்படும்.
எந்த வார்டு வாக்குகள் எண்ணப்படுகிறதோ, அதற்கான முகவர்கள் மட்டும் உள்ளே செல்ல வேண்டும்.

3.வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவர்கள் தேர்தல் அதிகாரி வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பாஸ் மற்றும் ஆதார் அட்டை , வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் .

4..Covid – தடுப்பூசி (இரண்டு) போட்டுக்கொண்ட சான்றிதழ் அல்லதுCovid negative சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் தேர்தல் அதிகாரிகள் வழங்கிய படிவம் 23-ன் நகலையும் எடுத்துச் செல்ல வேண்டும் .வேட்பாளர்கள் பெயர் அச்சிட்ட நோட் பேட் அல்லதுசிறிய நோட் பேட் எடுத்து செல்ல வேண்டும்.

5.முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடித்த பிறகுதான்இயந்திர வாக்கு எண்ணிக்கையை துவங்க அனுமதிக்க வேண்டும் .

6.அதன்பிறகு இயந்திர வாக்குப்பதிவு துவங்கும்போது ,படிவம் 23 இல் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திர எண்ணும் , வாக்கு எண்ணப்படும் இயந்திரம் எண்ணும் ,
சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும் ..

7.வாக்கு எண்ணிக்கை துவங்கும் போது அதில் பதிவான மொத்த வாக்குகளும்,
படிவம் 23. ல் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த வாக்குகளும் சரியாக உள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும் .

8.அதன்பின் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவாகியுள்ள வாக்குகளை குறித்துக்கொண்டு அந்த வாக்குகளும் , இயந்திரத்தில் காட்டப்படும் மொத்த வாக்குகளும் , சரியாக வருகிறதா என்று பார்க்க வேண்டும்..

9.வாக்கு எண்ணும் போது அந்த இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் அந்த அந்த இயந்திரத்தின் வாக்கு எண்ணிக்கையை அப்படியே நிறுத்த சொல்லிவிட்டு , அங்குள்ள நமது வேட்பாளரிடமோ அல்லது தலைமை ஏஜென்டிடமோ தகவல் தெரிவிக்க வேண்டும்..

10.வாக்கு எண்ணும் மையத்தில் எதிர் தரப்பினர் ஏதாவது பிரச்சனை செய்தால், முகவர்கள் உடனடியாக, அங்குள்ள நமது வேட்பாளரிடமோ , அல்லது முதன்மை முகவரிடமோ தகவல் தெரிவிக்க வேண்டும்.,வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவிக்கப்பட்டு சான்றிதழ் பெறும் வரைவாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு கண்டிப்பாக வெளியே வரக்கூடாது.

இதையும் படிங்க.!