chennireporters.com

திருவள்ளூர் அடாவடி பெண் அதிகாரியின் ஊழல் முறைகேடு குறித்து முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?

உதவி செயற்பொறியாளர் தஸ்நவிஸ்.

திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறையில் திருவள்ளூர் கோட்ட உதவி செயற்பொறியாளராக வேலை பார்ப்பவர் தஸ்நவிஸ்.

இவர் சாலை ஆய்வாளராக(R.I) இருந்து தற்போது உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார்.கடந்த 15 வருடங்களாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

அதிலும் குறிப்பாக திருவள்ளூர் திருத்தணி பகுதிகளில் பணியாற்றி வருகிறார் .இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் பல முறைகேடுகள் செய்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

தஸ்நவிஸின் உதவியாளராக இருப்பவர் லிங்கேஸ்வரன்.இவர் உதவி செயற் பொறியாளருக்கு ஜீப் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.அது தவிர இவர் தினக்கூலி அடிப்படையில் திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இவரைக் கண்டாலே திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலக ஊழியர்கள் அலறி நடுங்குகிறார்கள்.இவருக்கென்று அந்த அலுவலகத்தில் தனியாகமேஜை, நாற்காலி ஒதுக்கப்பட்டுள்ளது .

இவருக்கு வணக்கம் செலுத்தாதவர்கள் லிங்கேஸ்வரனை மதிக்காதவர்கள் அந்த அலுவலகத்தில் பணியாற்ற முடியாது. இப்படி லிங்கேஸ்வரனை எதிர்த்தவர்கள் நான்கு பேர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .

அது தவிர லிங்கேஸ்வரனு க்கு திருவள்ளூர் அடுத்த வெங்கல் பகுதியில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள (“சிங்கப் பெண்ணே”என்கிற துணிக்கடை) வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

லிங்கேஸ்வனுக்கு சொந்தமான துணிக்கடை.

அது தவிர உதவி செயற்பொறியாளர் தஸ்நவிஸ் அவர்களுக்கு இவர் பினாமியாக செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.இவர் மூலமாகத்தான் தஸ்நேவிஸ் பல டீலிங் செய்து வருகிறார் என்கிறார்கள் சில நேர்மையான அதிகாரிகள்.

லிங்கேஸ்வரன்.

சில வேலைகளை லிங்கேஸ்வரன் பெயரில் உதவி செயற்பொறியாளர் தஸ்நவிஸ் வேலை செய்ததாக கூறப்படுகிறது.குறிப்பாக இரண்டு தினங்களுக்கு முன்பு திருத்தணியில் நடை பெற்ற விழாவிற்கு முதலமைச்சர் வந்திருந்தார்.முதலமைச்சர் வருவதை முன்னிட்டு சாலையை சரி செய்யும் பணி நடைபெற்றது.

அதாவது திருமழிசை யிலிருந்து திருவள்ளூர் வரையிலான சாலை இரு பக்கங்களிலும் உள்ள முட் செடிகள் வெட்டுவது, பெயிண்ட் அடிப்பது, அழுக்கு மண்ணை அகற்றுவது போன்ற பணிகளை உதவி செயற்பொறியாளர் அவர்களுக்கு வேண்டப்பட்டவர் பெயரில் வேலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

லிங்கேஸ்வரன் தினமும் காலை எட்டு மணியிலிருந்து தஸ்நவிஸ் வீட்டிற்கு செல்லும் வரை அவருடன் தான் லிங்கேஸ்வரன் வலது கரமாகவும் மெய்க்காப்பாளனாகவும் இருந்து வருகிறார்.

இதுகுறித்து தர்மேந்திரன் என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் துறை அமைச்சரின் முதன்மை செயலாளருக்கும் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது .

அந்த புகாரில் மூத்த நேர்மையான அதிகாரி ஒருவரை நியமித்து உதவி செயற்பொறியாளர் தஸ்நவிஸ் பற்றி தனி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர். தஸ்நவிஸ்

அவ்வாறு விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வந்தால் தான் தஸ்நவிஸ் அவர்களின் சொத்து பட்டியலை கணக்கிட முடியும் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகள் பணம் கேட்டால் என்னிடம் புகார் அளியுங்கள் என்று அவருடைய செல்போன் நம்பரை சொல்லி பொதுமக்களிடம் வேண்டுகோள் வைத்தார்.

அப்படிப்பட்ட லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை நானே சிறைக்கு அனுப்புகிறேன் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சில நேர்மையான அதிகாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து அவருடைய விளக்கத்தை அறிய..திருவள்ளூர் உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் தஸ்நவீஸ் அவர்களை தொடர்பு கொண்டோம்.ஆனால் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.

அது தவிர அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கும் தங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உங்களுடைய விளக்கம் தேவைப்படுகிறது என்று நாம் செய்தி அனுப்பி இருந்தோம்.

அந்த செய்திக்கும் அவரிடமிருந்து எந்த வித விளக்கமும் பதிலோ இதுவரை தெரிவிக்கவில்லை. எனவே அவருடைய தரப்பு கருத்தையும், விளக்கத்தை தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!