திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கண்டிகை கிராமத்தில் அரசு ஊழியர்கள் இருவர் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மக்களுக்கு வழங்கப்படும் அரசின் பசுமை விடுதி திட்டத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து வீடு பெற்றுள்ள சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கண்டிகை கிராமத்தில் மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் சோபியா இவரது கணவர் பெயர் யோசுவா இவர்கள் இருவரும் சென்னை மேடவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் யோசுவா என்பவரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
டீச்சர் சோபியா.
இவர்கள் போலியான ஆவணங்களை கொடுத்து அதாவது வறுமை கோட்டிற்கு கீழே உள்ளதை போல ஆவணங்களை தயார் செய்து அரசு அதிகாரிகளிடம் கொடுத்து தமிழக அரசு வழங்கும் பசுமை வீடு திட்டத்தில் இரண்டு வீடுகள் பெற்று பயனடைந்துள்ளனர்.
டீச்சர் கணவர் யோசுவா.
ஆனால் அரசு பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த வீடுகள் வழங்க வேண்டும் என்று அரசாணை உள்ளது. இந்த நிலையில் அரசு அதிகாரிகளை ஏமாற்றி இவர்கள் வீடு பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது தவிர ஈக்காடு பிடிஒ அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகள் இவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு வீடு ஒதுக்கி இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல அவரது உறவினரான மெர்சி கரோலின் என்பவர் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது இதே திட்டத்தில் அவரும் ஒரு பசுமை வீடு பெற்றுள்ளார்.
இவர்கள் போலியான ஆவணங்கள் கொடுத்து அரசு அதிகாரிகளை ஏமாற்றி இந்த திட்டத்தில் வீடு பெற்றுள்ளனர். மேலும் அரசு ஊழியர்களாக இருப்பவர்களுக்கு அரசு திட்டத்தில் எந்த பயனும் பெறக் கூடாது என்று அரசு விதி இருக்கிறது. அரசு அதிகாரிகளை ஏமாற்றி வீடு பெற்றுள்ள சோபியா மற்றும் மெர்சி கரோலின் ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஈடியத் வசந்தா.
மேலும் எங்கள் கிராமத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும் மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிகாரிகள் வீடு வழங்கியது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. சோபியா மற்றும் மெர்சி கரோலின் அவர்களுக்கு வழங்கியுள்ள வீட்டின் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.
அதே போல அந்த வீட்டை அவர்கள் பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்துள்ளனர். எனவே அவர்களுக்கு வழங்கிய வீட்டின் உரிமைமை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறோம் ஈக்காடு , கிராம மக்களின் பெயரில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் ஈக்காடு பிடிஒ உள்ளிட்டு அதிகாரிகளுக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளனர்.பசுமை வீடு திட்டத்தில் இவர்கள் வீடு பெற்றதை கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் அதிகாரிகளை முட்டாளாக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது காரணம் சோபியாவின் பெயரில்தான் வீட்டின் பட்டாவும் பத்திரமும் உள்ளது ஆனால் வீடு பெற்றுள்ளது சோபியாவின் அம்மா ஈடியத் வசந்தா பெயரில் தான் அதிகாரிகள் வீடு வழங்கியுள்ளனர்.
டீச்சர் சோபியா.
சீட்டிங் செய்தது டீச்சர் சோஃபியா வா? இல்லை அதிகாரிகளா? புதிதாக பொறுப்பேற்கப் போகும் மாவட்ட ஆட்சியர் தான் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.