chennireporters.com

#Will the collector take action?அரசு புறம்போக்கு நிலத்தை ஆட்டைய போட்ட அதிகாரியும், அரசியல்வாதியும். நடவடிக்கை எடுப்பாரா கலெக்டர்?

திருவள்ளூர் அருகே அரசுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள புறம்போக்கு இடங்களை போலி ஆவணம் தயார் செய்து பினாமி பெயரில் வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கும் அதிகாரி மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் பற்றி புதிய புகார் ஒன்று எழுந்துள்ளது. சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் புதிய வெளிவட்ட சாலை அமைக்க அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை செய்து வருகிறது.ஆசிரியர்களை ஒருமையில் தரக்குறைவாக திட்டிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்! ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்! - Seithipunal
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தொழுவூர் செவ்வாப்பேட்டை, அய்யத்தூர், வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான அரசுக்கு சொந்தமான பொறம்போக்கு நிலங்களை அதாவது வாய்க்கால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் குட்டை, ஓடை, வண்டி பாதை என அரசுக்கு சொந்தமான இடங்களை போலியான ஆவணம் தயார் செய்து ஆளுங்கட்சியை சேர்ந்த திருவள்ளூர் முன்னாள்  ஒன்றிய திமுக சேர்மன் ஜெயசீலி ஜெயபாலன் கணவர் எஸ்.ஜெயபாலன் திமுக மாவட்டத் துணைச் செயலாளர் மற்றும் ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ ராமசாமியும் சேர்ந்து அரசாங்கத்திற்கு சொந்தமான கிராம பஞ்சாயத்துகளில் உள்ள ரோடுகளுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை தனது பினாமி பெயர்களுக்கு போலியான பத்திரம் தயார் செய்து அதை தற்போது விற்பனை செய்து வருகின்றனர்.
இதில் மேற்படி நபர்கள் நூறு கோடிக்கு மேல் ஆதாயம் பெற்றுள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் பிரதாப் டிடிசிபி ரோடு பஞ்சாயத்து ரோடு அரசுக்கு சொந்தமான அனைத்து இடங்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து மீண்டும் அந்தந்த கிராம மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த கிராமத்தின் சார்பில் கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Patta scheme : வீடு தேடி வரும் பட்டா.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.? தமிழக அரசின் அறிவிப்பு | Guidelines For Granting Patta For Land Free Of Cost Have Been Published Kak | Asianet ...
அரசுக்கு சொந்தமான இடங்களை திரும்ப மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர். ஏறக்குறைய நூற்றுக்கணக்கான சர்வே எங்களுடைய இடங்களை மேற்படி நபர்கள் போலி ஆவணம் தயார் செய்து தங்கள் பினாமி பெயரில் வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் தனியாக ஒரு விசாரணை குழுவை அமைத்து ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் திருவள்ளூர் மாவட்ட அறப்போர் இயக்க நிர்வாகிகள். இந்த செய்தி குறித்து புகாரில் கூறப்பட்டுள்ள நபர்கள் தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!