chennireporters.com

கல்லா கட்டும் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுப்பாரா டி.ஜி.பி.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. எல்லைக்குட்பட்டது வெங்கல் காவல் நிலையம்.இந்த காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர் இன்ஸ்பெக்டர் ஜெயவேல்.

இன்ஸ்பெக்டர் ஜெயவேல்.

இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வெங்கல் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.அது தவிர சில மாதங்கள் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பு வகித்து வந்தார்.

அதேநேரத்தில் வெங்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் எல்லாவிதமான சட்டத்திற்குப் புறம்பான வேலைகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது.

புன்னப்பாக்கம், தாமரைப்பாக்கம், வெள்ளியூர், காரணிபேட்டை, அத்திப்பேடு ஆகிய பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த பகுதியில் மது விற்பவர்கள் அனைவரும் இன்ஸ்பெக்டருக்கு வேண்டப்பட்ட ஒரு தலைமை காவலர் மூலம் மாதம் மாதம் கணிசமான தொகையை அன்பளிப்பாக வழங்கி வருகின்றார்கள்.

கண்டிகை கிராமத்தை சேர்ந்த மதன் என்பவர் இன்ஸ்பெக்டரின் உதவியுடன் கள்ளத்தனமாக மணல் ஓட்டி வருகிறார்.அது தவிர அந்தப் பகுதியில் உள்ள மிக முக்கிய வி.ஐ.பி. க்கள் பலருக்கு மணல் கடத்த இன்ஸ்பெக்டர் ஜெயவேல் அனுமதி அளித்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் ஜெயவேல் பல உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் மாதமாதம் மரியாதை செலுத்தி வருவதாக அவர் தரப்பில் கூறப்படுகிறது.

வெங்கல் கூட்டு ரோட்டில் உள்ள ஒரு பெரிய மளிகை கடை ஒன்றில் ஜே.பி ஸ்டோர் என்ற பெரிய கடையில் மாதமாதம் இன்ஸ்பெக்டர் ஜெயவேலுக்கு மரியாதை நிமித்தமாக அன்பளிப்பு வழங்கப்படுகிறதாம்.

கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் ஊரடங்கு நேரத்தில் வெங்கல் கிராமத்தை சேர்ந்த கத்திரிக்கா வியாபாரியை கத்திரிக்காய் எடுத்து செல்ல அனுமதிக்காததால் அவர் கத்தரிக்காயைரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினார்.அவரை வெங்கல் போலீசார் கடுமையாக தாக்கி அடித்து உதைத்தனர்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியதும் அப்போதைய எஸ்.பி. அரவிந்தன் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதும் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மீதும் நடவடிக்கை எடுக்காமல் கத்திரிக்கா விவசாயி வீட்டிற்குச் சென்று ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்களை வாங்கி கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்டு விட்டு வந்தார்.

அந்த பகுதியில் உள்ள பல தனியாருக்கு சொந்தமான குடோன்களில் கடந்த தீபாவளியன்று பெரிய தொகை இன்ஸ்பெக்டர் ஜெயவேலுக்கு போனசாக வழங்கப்பட்டதாம்.

அதே கொரோனா காலகட்டத்தில் சென்னையை சேர்ந்த சில திருநங்கைகள் ஆட்டோவில் ஆந்திராவிலிருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தனர்.

தனது உளவாளிகள் மூலம் தகவல் தெரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர் ஜெயவேல் அவர்களை மடக்கி பிடித்து அருவருக்கத்தக்க வகையில் அவர்களிடம் நடந்து கொண்டாராம்.

அது தவிர அவர்களிடமிருந்து பணத்தையும் பெற்றுக்கொண்ட ஜெயவேல் அவர்கள் கடத்தி வந்த மது பானங்களைஅந்த பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை கொடுத்து சிறப்பு விலைக்கு விற்க சொன்னாராம்.

இதுதொடர்பாக அப்போது மதுவிலக்கு ஐ.ஜியாக பணியாற்றிய செந்தாமரைக்
கண்ணன் அவர்களுக்கு பலர் புகார் கடிதங்களை அந்த பகுதி மக்கள் அனுப்பி இருக்கிறார்கள்.

மேலும் அப்போதைய வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த நாகராஜ் அவர்களுக்கும் புகார் அனுப்பப்பட்டது.மேலும் இதுதொடர்பாக தற்போது உளவுத்துறை அதிகாரிகளுக்கும் டி.ஜி.பி சைலேந்திரபாபு அவர்களுக்கும் உள்ளூர் தோழர்கள் சார்பில் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது .

அந்த பகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் வெங்கல் காவல் நிலையத்தை இன்ஸ்பெக்டர் ஜெயவேல் குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும் காவலர்களை வரி வசூல் செய்யும் தண்டல் காரர்களாக மாற்றியுள்ளார் என்று கிண்டலாகப் பேசி வருகிறார்களாம்.

ஜெயவேல் பற்றி யார் புகார் கூறினாலும் அதிகாரிகள் மட்டத்தில் ஒன்றும் வேலைக்கு ஆகாதாம்.அந்த அளவுக்கு பவர்ஃபுல் மேனாக இருக்கிறாராம் இன்ஸ்பெக்டர் ஜெயவேல்.

இதையும் படிங்க.!