நேற்று புத்தூர் அருகே நாராயணவனம் காட்டு பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக 18 பேரை புத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
செம்மர கடத்தலுக்கு பெயர் போன திருவள்ளூர் மாவட்டத்தில் ரெட்டில்ஸ், சத்தியவேடு, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பகுதிகளில் பெரிய கடத்தல் கூட்டமே செயல்பட்டுவருகிறது.
அது தவிர ஆந்திராவில் முக்கிய பகுதிகளான திருப்பதி, வெங்கட்டகிரி, சந்திரகிரி, புத்தூர், நாராயணவனம், நகரி, சத்தியவேடு, வரதையபாளையம் போன்ற பகுதிகளிலும் செம்மர கடத்தல் கும்பலுடன் தமிழக செம்மரக்கடத்தல் கூட்டத்திற்கு தொடர்பு இருக்கிறது .
இந்த இருதரப்பு கடத்தல்காரர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் கம்பெனிகள் நிறைந்த பகுதிகளில் வாடகைக்கு குடோன் எடுத்து செம்மரங்களை பதுக்கி வைத்து வருகின்றனர்.
அதுதவிர எண்ணூர் காட்டுப்பள்ளி போன்ற துறைமுகங்களில் வெளிநாடுகளுக்கு கண்டெய்னர் மூலமும் செம்மர கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் காரில் கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகளை போலீசார் பிடித்தனர்.
4 பேரை போலீசார் கைது செய்தனர்.அது தவிர ஏற்கனவே மாதர பாக்கம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செம்மரக்கட்டைகள் அந்த காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் செம்மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன செம்மரக்கட்டைகளை கடத்துவது தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
அரசியல்வாதிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் துணையுடன் இந்த செம்மரக் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கு அரசு தனியாக சிறப்பு அதிரடிப் படை ஒன்று உருவாக்கி தமிழக எல்லைக்குள் நுழையும் ஆந்திர மற்றும் கர்நாடக கேரள வாகனங்களை சோதனை செய்த பிறகே தமிழக எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து செம்மர கடத்தலை தடுக்க வேண்டும் அதற்குரிய அனைத்து உத்தரவுகளையும் அரசு நிறைவேற்றி தந்தால் மட்டுமே செம்மர கடத்தலை தடுக்க முடியும்.