#TN 2026 election #DMK party news #special story #stunning news.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் இரண்டாம் கட்ட தலைவர்களின் மெத்தனமும் அவர்கள் அடித்த கொள்ளையே காரணம் என்கின்றனர் சில உளவுத்துறை அதிகாரிகள். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் காதுக்கு ஆட்சியிலும், கட்சியிலும் நடந்த தவறான விஷயங்களையும் , செய்திகளையும் கொண்டு செல்லாமல் போனது தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்கின்றனர் திமுகவின் முக்கிய நிர்வாகிகள். 
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
அதிகாரிகள்,, அமைச்சர்கள் மாவட்ட செயலாளர் என கட்சி நிர்வாகிகள் செய்கிற தவறை அவருடன் இருந்த முதன்மை செயலாளரும், ஜால்ரா அமைச்சர் சேகர்பாபு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அவருக்கு தகவல் தராமல் மூடி மறைத்ததே இந்த தோல்விக்கு காரணம் என்கிறார்கள். திமுகவின் மூத்த தலைவர்கள். அது மட்டும் இல்லாமல் தேர்தல் வியூக பொறுப்பாளர்கள் என்று வந்த பலரை நம்பி இன்றைக்கு திமுக நடுத்தெருவில் நிற்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
பிரசாந்த் கிஷோர்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு திமுகவின் சார்பில் பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக வழிவகைகளை செய்து கொடுத்தார். அதற்காக திமுக பல கோடி ரூபாய் அவருக்கு சம்பளமாக கொடுத்து ஒப்பந்தமும் போட்டது. வெற்றியும் பெற்றது.
அவர் என்ன விதமான வியூகத்தை வகுத்தாரோ அதைக் காப்பியடித்து ஸ்டாலினின் மருமகன் சபரீசன் pen என்கிற பெயரில் ஒரு கம்பெனியை தொடங்கி பிரசாந்த் கிஷோர் செய்த விஷயங்களை ஃபாலோப் செய்ய தொடங்கினார்.
அதன் பிறகு கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்கள் என அனைவரின் செயல்பாடுகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சபரீசன் மூலம் தனது மாமனார் மு.க. ஸ்டாலினுக்கு தகவல்களாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
தண்டையார்பேட்டையை சேர்ந்த சுனில் கனுகுலு.
அதைத் தவிர ஒட்டுமொத்த கட்சியின் நிழல் தலைவராகவும் நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். இதனால் தமிழ்நாடு முழுவதும் சபரீசனைக் கண்டு கட்சி நிர்வாகிகள் அஞ்சி நடுங்கினார்கள். அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சியை முடித்து 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்று எதிரிகளை குறைவாக மதிப்பிட்டு தன்னுடன் இருந்த அதிகாரிகள் அமைச்சர்கள் அடித்த ஜால்ராவினால் துதி, பாடி துதி பாடி நடுத்தெருவில் விட்டு விடுவார்கள் என்பதை நினைக்காத திமுக தலைவர் ஸ்டாலின் அதிகாரிகளை நம்பி ஏமார்ந்து போனார்.
இந்த நிலையில் ஏற்கனவே பிரசாந்து கிஷோரிடம் பணியாற்றிய சுனில் கனுகுலு என்பவர் உதயநிதியிடம் தொடர்பு கொண்டு தங்களை முதலமைச்சராக்கி விடுகிறேன் பெரும்பான்மையுடன் தங்களை வெற்றி பெற செய்வது என் கடமை என்று திமுகவிற்குள் உள்ளே வந்தார்.
ஸ்டாலின் குடுபத்திற்குள் கலகம் செய்த சுனில் கனுகுலு.
இதற்கு சபரீசன் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் உதயநிதி தனது தந்தையிடம் எனது அரசியல் விஷயத்தில் சபரீச்சனை தலையிடக்கூடாது என்று கடுமையான குரலில் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் மகனுக்கும், மருமகனுக்கும் ஏற்பட்ட சண்டையில் திமுக தலைவரின் மனைவி துர்கா ஸ்டாலின் தனது மருமகனை சமாதானப்படுத்தி தாங்கள் உதயா விஷயத்தில் தலையிட வேண்டாம். சிறிது காலம் துபாய்க்கு சென்று விடுங்கள் என்று சொல்லி துபாய்க்கு அனுப்பி வைத்தனர். அவர் அங்கிருந்தே pen நிறுவனத்தின் பணிகளை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
இடையில் புகுந்த சுனில் கனுகுலு உதயநிதிக்கும் சபரீசனுக்கும் சண்டை மூட்டி விடுவதிலேயே குறியாக இருந்து வந்தார் என்றும் மேலும் சென்னையை தன் கையில் வைத்திருக்கும் சேகர் பாபுவுக்கும் உதயாவுக்கும் ஒரு பெரும் இடைவெளியை ஏற்படுத்தினார் என்றும் சொல்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
அது மட்டுமல்லாமல் உதயநிதியின் பெயரைச் சொல்லி தமிழகத்தில் உள்ள அனைத்து துறை முக்கிய அதிகாரிகள் இடத்திலும் பல விஷயங்களை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு பல கோடி ரூபாய் கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர் அரசியல் தலைவர்களுக்கு செய்து கொடுத்த ஒரு தேர்தல் வீயூகம் கூட வெற்றி பெறவில்லை என்பது எல்லா கட்சித் தலைவர்களுக்கும் தெரியும்.
சென்னை, திருச்சி, மதுரை கோவை, நெல்லை போன்ற மாநகரங்களில் உள்ள போலீஸ் கமிஷனர்களிடத்திலும் உயர் போலீஸ் அதிகாரிகள் இடத்திலும் சுனில் கனுகுலு பல விஷயங்களை தனக்கு சாதகமாக செய்து முடித்து கொண்டார் என்கிற தகவல் தற்போது வெளிவர தொடங்கி உள்ளன.
பல போலிகளையும் ஃபிராடுகளையும் நம்பி திமுக தனது தோல்வியை தழுவி இருக்கிறது என்பதை இன்னும் கூட ஒத்துக்கொள்ள மனமில்லாமல் தற்பெருமை பேசி வருகிறது.
இந்த சுனில் கனுகுலு கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் பெரிய அறிவாளி என்றும் சொல்லிக் கொள்ளுகிறார் ஆனால் இவர் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர். இவரைப் பற்றி கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி பொய்களின் நாயகன் சுனில் கனுகுலு என்று தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அப்போதே அந்த செய்தியில் இவரது ஃபிராடுத்தனங்களை தோலுரித்துக் காட்டி இவர் யார் என்பதை விளக்கமாக எழுதியிருக்கிறோம். 
இப்படிப்பட்ட ஒரு ஃபிராடு பேர் வழியை நம்பி உதயநிதி ஸ்டாலின் எதிர்கால அரசியல் மற்றும் முதலமைச்சர் கனவில் இருந்தவரை பொய்களின் நாயகன் சுனில் கனுகுலு அந்தக் கனவையும் சிதைத்து உதயநிதியையும் ஏமாற்றி பல கோடி ரூபாய் சுருட்டி இருக்கிறார் என்பதை திமுகவினேரே பெரும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் எந்தெந்த வேலைகளை உதயநிதி பெயர் சொல்லி முடித்திருக்கிறார் அதன் மூலம் இவர் அடைந்த ஆதாயம் குறித்து சிபிஐ விசாரணை செய்து உண்மையை கண்டறிய வேண்டும் என்கின்றனர் டெல்லியில் உள்ள சில திமுக வின் முக்கிய நலம் விரும்பிகள்.
இப்போதாவது இந்த சுனில் கனுகுலுவின் உண்மையை தெரிந்து கொண்டு உதயநிதி அவரை விலக்கி வைத்து தங்களது அரசியல் பணியை சிறப்பாக செய்து மீண்டும் 2031 ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் பல அறிவார்ந்த விஷயங்களை செய்ய வேண்டும் என்கின்றனர் தமிழகத்தில் உள்ள திமுகவின் விசுவாசிகள். உதயநிதி செய்வாரா? அல்லது செவி சாய்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்கவேண்டும்.
