chennireporters.com

கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

சென்னை புளியந்தோப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளில் 90 சதவீதம் பூச்சு வேலை தரமற்றது என்று ஐ.ஐ.டி. ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிடங்களை கண்காணித்து வந்த அதிகாரி சவுந்தர்ராஜன்.

இந்த விஷயத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால் இவர் இந்நேரம் பணி நீக்கம் செய்யப்பட்டு இவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு இருக்கும்.ஆனால் EE பதவியில் இருந்த சௌந்தரராஜன் தற்பொழுது SE பதவியில் இருக்கிறார்.

இந்த வழக்கில் இருந்து இவரை காப்பாற்ற வேறு ஒரு பதவிக்கு மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கே.பி. பார்க் (KP PARK) முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்ன அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அன்பரசன் ஆகியோர் அமைதிக்கும் இந்த அதிகாரி காப்பாற்றப்படுவதற்கும் சம்பந்தம் இருக்கிறதா?

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் ஹித்தேஷ்குமார்மக்வானா (Hitesh Kumar S. Makwana, IAS,) சவுந்திரராஜனை பணியிடை நீக்கம் செய்யாமல் பாதுகாக்க காரணம் என்ன இவர்களுக்குள் என்ன டீல்?

கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்கள் அனைத்தையும் விசாரித்து குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னதில் உண்மை இல்லையா?

அறப்போர் கொடுத்த புகார் மீது எப்.ஐ.ஆர் பதியப்படுவது எப்பொழுது? என்று அறப்போர் இயக்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க.!