புதிய கலெக்டர் பிரதாப் திருவள்ளூர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒன்றை ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஆட்சியர் பிரபு சங்கர் அவர்கள் போக்குவரத்து துறைக்கு திடீரென மாற்றப்பட்டார்,
புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள பிரதாப் முருகன் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ரசாயன பொறியியல் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றவர். பிரதாப், IAS அவர்கள் 89 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர், அவரது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி ஆவார். அவரது தந்தை முருகவனம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகிலுள்ள வட்ராப் என்ற விவசாய கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான விவசாயி, அவரது தாயார் முல்லைக்கொடி குடும்பதலைவியாக உள்ளார்.
பிரதாப் முருகன் தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரியான இவர் துணைச் செயலர், ஆணையர், திட்ட இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
அவருடைய அனுபவங்கள்;
திட்ட இயக்குனர்: TN பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், சென்னை, தமிழ்நாடு.
துணைச் செயலாளர்: சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை, தமிழ்நாடு அரசு, சென்னை, தமிழ்நாடு.
கமிஷனர்: கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் நிர்வாக இயக்குனர், கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி.
துடிப்பு மிக்க இளைஞரான பிரதாப் முருகன் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சியாளராக பொறுப்பேற்று அவருக்காக காத்திருக்கும் பணிகளை சிறப்புடன் செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக ஊழல் செய்வதையே தொழிலாக கொண்ட நெடுஞ்சாலைத்துறை, சம்பளத்தை தவிர லஞ்சத்தையே வாழ்வாதாரமாக நினைக்கும் பொதுப்பணித்துறை, மக்கள் பணிகளை சிறப்பாக செய்யாமல் கிராமத்தில் உள்ள அடிப்படை பணிகளை செய்யாமலேயே பல லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு பிடிஓக்கள் பதவியில் இருந்த பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு பணிகள் செய்யாமல் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
எனவே குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கும் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது பிரதாப் முருகன் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் சொல்லப்பட்ட அதிகாரிகள் மீது காலம் தாழ்த்தாமல் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தி மக்கள் தொடர்பு துறையில் ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக இரண்டு உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் இல்லாமல் பணிகள் தேக்கநிலையில் உள்ளன. அந்த இடம் காலியாக இருக்கிறது. உடனடியாக அந்த காலிப்பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும். குடிசை மாற்று வாரியத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருக்கிறது. அது குறித்து தனி அலுவலரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஊழல் மையமாகி அதிகாரிகள் லஞ்சம் நோய் பிடித்து சுகபோகமாய் வாழ்ந்து வருகின்றனர். தவறு செய்யும் அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் சாட்டையை எடுத்து சுழற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் திருவள்ளூர் மாவட்ட மக்கள்.
மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது அது குறித்து விரிவான விசாரணை நடத்தி தவறு செய்து அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.