பெண்ணல்ல. கேரளாவில் நடந்த திருவிழாவில் பெண்களை போல ஆடை அலங்காரம் செய்தவருக்கு முதல் பரிசு.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்குபெறும் திருவிழாவில் பெண்களைப் போல ஆடை அலங்காரம் செய்தவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது..
இந்தியாவில் அழகான பெண்கள் யார் என்றால் கேரளத்து பெண்களை தான் அதிகம் சொல்லுவார்கள்.
அப்படிப்பட்ட கேரளத்தில் நடந்த கோவில் திருவிழா ஒன்றில் ஆண்கள் பெண்கள் வேடமிட்டு பெண்களே தோற்றுப் போகும் அளவிற்கு மிக நேர்த்தியாக ஒப்பனை செய்து இருக்கிறார்கள்.
வீடியோ அய்யப்பதாஸ்.
இந்த வீடியோ பார்க்கும் மக்கள் திரைப்பட நட்சத்திரங்களை போல இருக்கிறார்கள் இவர்கள் அந்த அளவுக்கு மிக நேர்த்தியாக ஆடை அலங்காரம் செய்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த வீடியோவில் இருப்பவர்கள் அனைவரும் ஆண்கள் என்கிற அதிர்ச்சி செய்தி கேட்டு நாம் மகிழ்ச்சி அடைந்தோம். கேரளாவில் ஆண்களும் அழகாகத்தான் இருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் நாம் தெரிந்து கொள்கிறோம்.