Chennai Reporters

ஆருத்ரா கோல்ட் மோசடி அண்ணாமலையை கைது செய்யுங்கள். காயத்ரி ரகுராம்

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் அதன் நிறுவனரும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான ஹரிஷ் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையையும் கைது செய்ய வேண்டும் என்று அக்கட்சியில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் வலியுறுத்தி வருகிறார்.

 

 

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதா, மாதம் 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாக கூறி விளம்பரம் செய்தது.  இதன் நிறுவனர் ஹரிஷ் தமிழ்நாடு பாஜக விளையாட்டு பிரிவு செயலாளராக பதவி வகித்தார் .

 

அவர் கொடுத்த வாக்குறுதி ஏற்று ஏராளமான பொதுமக்கள் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் ரூபாய் 2438 கோடி ரூபாய் பணம் வசூலித்ததாக கூறப்பட்டது . ஆனால் மக்களிடம் வாங்கிய பணத்தை சொன்ன நேரத்தில் ஆருத்ரா நிறுவனம் வழங்கவில்லை என வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர்.  இதை அடுத்து ஆருத்ரா நிர்வாக இயக்குனர்கள் 14 பேர் ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட ஐந்து நிறுவனங்கள் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த வழக்கில் எட்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்த ஹரிஷை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்த நிலையில் 24 ஆம் (24.3.2023) தேதி ஹரிஷை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

 

அவரோடு மாலதி என்ற ஆருத்ரா நிறுவன நிர்வாகியும் கைது செய்யப்பட்டார்.  இது குறித்து  பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பொது மக்களின் பணத்தை ஏமாற்றிய ஆருத்ரா கோல்டு மோசடியில் பாஜக அமர் பிரசாத் ரெட்டியின் வலது கரம் பாஜக மாநில விளையாட்டு பிரிவு செயலாளர் ஹரிஷ் கைது. அண்ணாமலை முன்னாள் காவலராக இருந்து தமிழக மக்களை ஏமாற்றிய திருடனுக்கு உதவி செய்துள்ளார். 

குறிப்பாக பெண்களின் பணம் மற்றும் தங்கம் பதவி கொடுத்து அவருக்கு பாதுகாப்பு கொடுத்தவரையும் கைது செய்ய வேண்டும். அண்ணாமலையின் சாதனை போலி மலை என்று குறிப்பிட்டுள்ளார் காயத்ரி நேற்று அவர் ஆருத்ரா விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். 

 

அதில் ஏப்ரல் 14 அன்று நீங்கள் ஏன் ஊழலுக்கு எதிராக நடக்கவில்லை அதற்கு பதிலாக நீங்கள் டெல்லி செல்கிறீர்கள் போலி வாக்குறுதி எம்பி சீட்டுகளுக்காக ஏன் எந்த ஊடகமும் ஆருத்ரா ,ஐஎஃப்எஸ் மற்றும் பிற நிறுவனங்களை பற்றி கேள்வி கேட்கவில்லை . எத்தனை பேர் உங்களிடம் பணத்தை திரும்பப் பெறப் போகிறார்கள் என்பதை பொறுத்து  இருந்து பாருங்கள். உருட்டு மன்னன் உங்கள் ஊழல் பற்றி கேட்டால் ஏன் கண்களை தோண்டி எடுக்கிற?  திமுக ஊழலை கூட தேடுவதற்காக ஈபி மற்றும் வருமான வரித்துறை உள்ளது உங்க எக்க்ஷெல் EXCEL SHEET  சீட் புகார் தேவை இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!