பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுக்கு 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது – மார்ச் 10 (1933).
தமிழ்த்தேசியத் தந்தை..
தமிழ்நாட்டு விடுதலைக்கே தன்னை ஒப்புவித்துக்கொண்ட தலைமகன்..
தனித்தமிழை மக்கள் இயக்கமாக்கித் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம் – எனப் படைக்கருவிகளாய் இதழ்களை நடத்திய பெருந்தகை..
தூய தமிழ் எழுத்தாளரும், பேச்சாளருமான பேராசான்..
தமிழிய மெய்ப்பொருள் அறிஞர்..
ஈடு இணையற்ற ஆற்றல்சால் பாவலர்..
– எனப் பல்துறைக் கவனக வினைஞர்..
நம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா அவர்களின் 90 ஆம் ஆண்டுப்
பிறந்தநாள்.
அவரின் அருந்தவ
உள்ள உணர்வுகள் வென்றிட
உழைத்திடுவோம்!…
உடல் தரும்
பிணிகளைத் தடைகளைப்
பொருட்டென எண்ணிடேன்!
என்னேர் உயிரினை
இழப்பினும் தயங்கிடேன்;
ஏற்றுள்ள கொள்கையே
பெரிதென்(று) இயங்குவேன்!
அன்னை மொழி, இனம்,
நாட்டினை எதிரிகள்
ஆள்வதை மீட்டிடும் வரை,
விழி உறங்கிடேன்!
இம்மா நிலந் தனில்
எண்ணிலா ஏழைகள்
ஏற்றத் தாழ்வுகள்
எங்கணும் இருக்கையில்
சும்மா இருந்திட
மனம் வர வில்லையே!
எம்மா நிலத்தையும்
இனத்தையும் மொழியையும்
எத்தனை முயற்சிகள்
செய்தே ஆயினும்
வெம்மாப் பெரும்படை
நடத்தியே ஆயினும்
விடுதலை செய்வதே
உலகில்,என் வேலையாம்!
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
1994 – இல் எழுதியது..