chennireporters.com

விடுதலை வீரர் பூலித்தேவர் பிறந்த நாள்.

இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த முன்னோடி புலித்தேவர் 1715ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் ‘காத்தப்ப பூலித்தேவர்’ என்பதாகும். ‘பூலித்தேவர்’ என்னும் பெயர் ‘புலித்தேவர்’ என்று அழைக்கப்பட்டது.

இந்திய விடுதலை வரலாற்றில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதல்முறையாக 1751ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கு (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

தமிழ்நாடு அரசு, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் புலித்தேவர் நினைவைப் போற்றும் வகையில் புலித்தேவர் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவற்றை அமைத்துள்ளது.

விடுதலை வீரர் பூலித்தேவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.  அது தவிர அவரின் புகழை இந்தியா முழுவதும் போற்ற செய்வோம் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க.!