chennireporters.com

மல்யுத்த வீரர்களிடம் பாஜகவினர் பாலியல் வன்முறை: ஜந்தர் மந்தரில் போலீஸ் அராஜகம்.

டெல்லி போலீசார் தாக்கியதால் பரபரப்பு நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மல்யுத்த வீரர்களை போலீசார் தாக்கியதால் டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், ஆளும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி போலீசில் புகார் செய்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்து சிறையில் அடைக்கக் கோரி வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் தலைமையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த 23-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினற்னர்.

பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்ட களத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.

நன்றி :  ANI.

பத்து நாட்களுக்கு மேலாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர்களான கபில்தேவ், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் மற்றும் ஷிகா பாண்டே ஆகியோர் ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.

    நன்றி : PTI.

மேலும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட தடகள வீரர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

போலீசார் தாக்குதல்: இந்நிலையில், நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மல்யுத்த வீரர்களை போலீசார் தாக்கியதால் ஜந்தர் மந்தரில் பரபரப்பு ஏற்பட்டது. மல்யுத்த வீரர்கள் போராட்ட இடத்திற்கு படுக்கைகளை கொண்டு வர முயன்றபோது மோதல் தொடங்கியுள்ளது.

மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டே போலீசார் குடிபோதையில் வந்து மல்யுத்த வீரர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் இரண்டு வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அது தவிர நாடு முழுவதும் உள்ள அனைத்து துறை விளையாட்டு வீரர்களும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க.!