chennireporters.com

விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சி.

ராகுல் காந்தியின் கன்னியாகுமரி நடை பயணத்தை தொடங்கி வைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானத்தில் சென்றார்.

அதே விமானத்தில் எச்.டி.எப்.சி வங்கியில் பணிபுரியும் கௌசல்யா என்ற பெண்ணும் பயணம் செய்தார்.

 

1991ம் ஆண்டு திமுகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு திமுக நடத்திய வீதி நாடகத்தில் கௌசல்யா நடித்து ஸ்டாலினுக்காக வாக்கே சேகரித்து பிரச்சாரம் செய்திருந்தார்.

அந்த நாடகத்தில் அவர் நடித்த காட்சியை அப்படியே ஸ்டாலினிடம் பேசி காட்டினார்.

அதை கேட்ட முதல்வர் ஸ்டாலின் சிரித்தபடியே கௌசல்யாவுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படிங்க.!