chennireporters.com

முதல்வருக்கு தெரியுமா?காத்திருக்கும் 237 பேரின் டி.எஸ்.பி. கனவு!

நான்கு மாதம் டிஎஸ்பி பயிற்சி முடித்து காத்திருக்கும் இன்ஸ்பெக்டர்களுக்கு முதலமைச்சர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை  எழுந்துள்ளது தமிழக காவல்துறையில்.

கடந்த 95ஆம் ஆண்டு நேரடி சப் இன்ஸ்பெக்டராக பயிற்சி முடித்தவர்கள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகின்றனர்.  அவர்களுக்கு தற்போது டிஎஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் . கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு டிஎஸ்பிக்கான அனைத்து பயிற்சிகளை முடித்துவிட்டு பதவி உயர்வுக்காக காத்திருக்கிறார்கள் .

சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே முதல்வர் இவர்களுக்கு டிஎஸ்பி ஆக பதவி உயர்வு வழங்குவாரா என்கிற ஏக்கத்தில் இருக்கிறார்கள் இந்த டிஎஸ்பி பயிற்சி முடித்து காத்திருக்கும் இன்ஸ்பெக்டர்கள்.

1994 – 95 ஆம் ஆண்டுகளில் 1100 பேர் நேரடி காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு நடந்து கொண்டிருந்த போது, ஏற்கனவே பணியிலிருந்த காவலர்கள் நீதிமன்றத்தை அனுகி டிகிரி முடித்து 5 ஆண்டுகள் பணி நிறைவடைந்த காவலர்களுக்கு தகுதி அடிப்படையில்    20 % நேரடி காவல் உதவி ஆய்வாளர் பணி வழங்க உத்தரவுப் பெற்று 20% கோட்டா என ஒரு 237 பேர் ஆக மொத்தம் 1337 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதில் முதலில் 500 பேர்களுக்கு 1996 ஆம் ஆண்டு பயிற்சிக்கான ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள 837 பேருக்கு அடுத்த 15 நாட்களில் பயிற்சிக்கான இடம் ஏற்பாடு செய்து அனுப்பபடுவதாக இருந்த சூழலில் சில காரணங்களுக்காக தாமதம் ஆகிவிட்டது.

1996 வது வருடம் SI பேட்ச் பயிற்சி முடித்த பின்பு 20% கோட்டாவினருக்கு சென்னை ஆவடி அடுத்த வீராபுரத்திலும், 350 பேருக்கு கோவை தற்காலிக காவல் பயிற்சி கல்லூரியிலும், மீதமுள்ள 237 பேருக்கு சென்னை அசோக் நகர் காவல் பயிற்சி கல்லூரியிலும் 1997 ஆம் ஆண்டு பயிற்சி வழங்கபபட்டது.

அதில் 1996 ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற அனைவரும் தற்போது காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றும், அதில் பலர் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றனர். கோவையில் பயிற்சி பெற்ற உதவி ஆய்வாளர்கள் பாதி பேர் காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில், வீராபுரம் 20% கோட்டாவினரும் அனைவரும் காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று விட்டனர்.

சென்னை அசோக் நகர் காவல் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றவர்களில் 92 பேர் காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று விட்டனர். மொத்தத்தில் இதுவரை மீதமுள்ளவர்கள் 239 பேர் கடந்த 26 ஆண்டுகளிள் ஒரே ஒரு பதவி உயர்வு பெற்று காவல் ஆய்வாளராக சுமார் 14 ஆண்டுகளாகி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

அத்தனை பேரும் காவல் துணை கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான முன்பயிற்சியும் முடித்து சுமார் 4 மாதங்களாகியும் DSP பதவி உயர்வு உத்தரவுக்காக  காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் சுமார் 15 பேர்கள் பதவி உயர்வு பெறாமல் இறந்து விட்டனர். 2 பேர் விரக்தியில் விருப்ப ஓய்விலும், 1 நபர் 60 வயதாகி ஓய்வும் பெற்று விட்டார்.

கடந்த 26 ஆண்டு பணியில் ஒரே பதவி உயர்வுடன் மன விரக்தியில் பலவித உடல் மற்றும் மனதளவில் சோர்ந்து போயிருக்கும் 1997ஆம் ஆண்டு நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கு DSP பதவி உயர்வு கொடுத்து நீண்ட நாள் ஏக்கத்தின் துயர் நீக்க  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு நடைபெறவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்ல கேட்டுக் கொள்கிறோம். என்கிற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  திராவிட மாடல் அரசு இதை விரைவில் செய்து தரவேண்டும்.

இதையும் படிங்க.!