Chennai Reporters

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு பேர் சஸ்பெண்ட்.

அருணா ஜெகதீசன் அறிக்கை எதிரொலி: இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த போது கலவரமாக மாறியது. அதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. முழுமைப்படுத்தப்பட்ட விசாரணை அறிக்கையை அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தார்.

அதனடிப்படையில் தமிழக சட்டசபையில் இது தொடர்பாக தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திருமலை மற்றும் காவலர்கள் சுடலைக்கண்ணு, சதீஸ், சங்கர் ஆகிய 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!