chennireporters.com

மிஸ்டர் திருமாவளவனை சந்தித்தார் காயத்ரி ரகுராம்.

இன்று பா.ஜ.க வின் முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இருவரும் நலம் விசாரித்துக்கொண்டனர். காயத்ரி ரகுராம் திருமாவளவனை  பல கூட்டங்களில் கடுமையாக பேசி விமர்சித்திருக்கிறார்.  ஒரு கூட்டத்தில் என்ன மிஸ்டர் திருமாவளவன் என்று காலிலும் ஒன்று இருக்கிறது என்று பேசினார் இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பிய காயத்ரியின் பேச்சுக்கு விசிக சார்பில் கடும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. பாஜக தலைமை காயத்ரி ரகுராமை  கட்சியிலிருந்து நீக்கி வைத்திருந்தார்கள் அவர் தன்னை அண்ணாமலை வார ரூமில் இருந்து அருவருக்க  தக்க வகையில் தன்னை விமர்சித்து எழுதுவதாக குற்றம் சாட்டி அந்த கட்சியில் இருந்து விலகினார்.

அதன் பிறகு திமுக அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து நான் பணியாற்ற விரும்புகிறேன் என அறிவித்திருந்தார்.  இந்த நிலையில் சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள்  கட்சி தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து பேசினார் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று  சிறுத்தைகள் மற்றும் காயத்ரி  தெரிவித்தனர்.

காயத்ரி ரகுராம் திருமாவளவனுக்கு சால்வை வழங்கினார் திருமாவளவனோ காயத்ரி ரகுராமுக்கு சால்வை அணிவித்தார்.  தமிழக அரசியல் வரலாற்றில் அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை நிரந்தர நண்பர்களும் இல்லை என்பதற்கு காயத்ரி ரகுராம் திருமாவளவன் சந்திப்பு ஒரு உதாரணமாகிறது.

மேலும் அரசியல் ஒரு சாக்கடை என்பதையும் இந்த நேரத்தில் காயத்ரி ரகுராம் நினைவுபடுத்தி இருக்கிறார்.  இன்னும் சில நாட்களில் என்னை திருமாவளவனுக்கு எதிராக பேச வைத்தார்கள் என்று அறிக்கை வெளியிட்டாலும் வெளியிடுவார் என்கிறார்கள் சிறுத்தைகள், அக்காவை இழந்து வாடும் திருமாவளவனுக்கு அன்பான தங்கையாக காயத்ரி அமைந்திருக்கிறார்.  அண்ணன் இல்லாத காயத்ரி ரகுராமுக்கு திருமாவளவன் அண்ணனாகியிருக்கிறார் இதுதான் இன்றைய சமூக வலைதளங்களில் வைரலான செய்தி.

இதையும் படிங்க.!