chennireporters.com

திருச்சி இளைஞருக்கு இந்திய இளம் எழுத்தாளர் விருது.

தமிழகத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளரின்  கவிதை புத்தகத்தை டெல்லியில் ஒன்றிய  அமைச்சர்கள் வெளியிட்டனர். டெல்லி ஜன்பத்தில் உள்ள சங்கரிலா ஹோட்டலில் நடைபெற்ற விழாவில்  இளம் எழுத்தாளரின் படைப்புகளை சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி பேசினார்கள்.

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஜோசன் ரஞ்சித் இளங்கலை ஆங்கில இலக்கியமும் முதுகலை  இதழியல் படித்துள்ளார். இவர் “DUDE” எனும் ஆங்கில கவிதை புத்தகம் எழுதியுள்ளார். இது தவிற  அவர் எட்டு நூல்களை எழுதியுள்ளார்.

 

இந்த நூல் டெல்லியில் நடைபெற்ற Top-notch Foundation மற்றும் OUTLOOK வார நாளிதழ் நடத்திய சர்வதேச விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் பகன் சிங் குலஸ்தே , இந்திய நடிகை ஹேமா மாலினி இருவரும் வெளியிட்டனர்.

நூலின் முதல் பிரதியை  எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித் அவர்களின் பெற்றோர் ஜான் பிரிட்டோ மற்றும் ஜோனி தனசீலி பெற்றுக்கொண்டனர்.

விழாவில் மத்திய அமைச்சர்கள், பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான சர்வதேச, இந்திய தொழில் அதிபர்கள்  பலர் பங்கேற்றனர்.

கவிஞர் ஜோசன் ரஞ்சித் அவர்கள் இதுவரை 4 தமிழ் புத்தகங்கள் மற்றும் 3 ஆங்கில புத்தகங்கள் வெளியீட்டுள்ளார், இந்நூல் இவரது 8வது படைப்பாகும், தமிழகத்தில், திருச்சி மாவட்டத்தில் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் இருந்து நாட்டின் தலைநகரத்தில் நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்த இந்த இளைஞர் மேலும் பல படைப்புகள் சமூகத்திற்காக எழுத வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

DUDE புத்தகம் மொத்தம் 120 பக்கங்களை கொண்டத.  நம்பிக்கை, அன்பு, பாசம், தோல்வி, வெற்றி என பல சிந்தனைகள் அடங்கிய இரண்டு மூன்று வரி கவிதைகள்.
இந்த நூலுக்கு மூன்று மத்திய அமைச்சர்கள் மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர் ஆகியோர் இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கி உள்ளனர்.

இந்நிகழ்வில் கவிஞர் ஜோசன் ரஞ்சித்துக்கு  வளரும் இளம் இந்திய எழுத்தாளர் விருதை உத்திரபிரதேச தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் வழங்கினார்.

இதையும் படிங்க.!