chennireporters.com

ஆணாதிக்க சமூகத்தின் பெண் போராளி ஜெயலலிதா!

உறுதியான, துணிச்சலான பல முடிவுகளை எடுத்து ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் சமூகத்தில் தனி ஒரு பெண்ணாக நின்று இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய இரும்பு பெண்மணி  ஜெயலலிதா அவர்கள் நினைவு தினம் இன்று.

தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.

 

தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால் சூழ்நிலை காரணமாக ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய ‘எபிஸில்’ என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.

இவர் ‘வெண்ணிற ஆடை’ என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவரது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை தந்த படம் 1980ஆம் ஆண்டு வெளியான ‘நதியை தேடி வந்த கடல்’ ஆகும்.

அதே ஆண்டில், அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர் அவர்கள், இவரை பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார்.

 

எம்.ஜி.ஆரின் மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரன் அவர்களை அதிமுகவின் எதிர்கால தலைவராக கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் 1989ஆம் ஆண்டு அதிமுக கட்சி ஒன்றுபட்டு ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.

1991, 2001, 2011, 2015 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

தமிழ்நாட்டின் தங்க தாரகையாக திகழ்ந்த ஜெயலலிதா அவர்கள் தன்னுடைய 68வது வயதில் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார்.

ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் தன் அமைச்சரவையில் இருந்த எல்லா அமைச்சர்களையும் குனிந்து தன் காலடியில் விழ வைத்த ஆளுமைக்குரிய நபர். ஒரு தலைமையை எதிர்த்து பேச முடியாமல் வாய் மூடி மௌனமாக இருந்த ஆண்கள் சமூகம் ஜெயலலிதா இடத்தில் அடிமையாகவே இருந்தது.

ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தில் மறக்க முடியாத பல சம்பவங்கள் நிகழ்த்தி காட்டியவர். தமிழக அரசியலில் மீண்டும் இது போல் ஒரு ஆளுமை வாய்ந்த ஒரு அரசியல் தலைவர் உருவாக முடியாமா என்பது கேள்விக்குறியே!

ஜெயலலிதாவிற்கு மாற்று ஜெயலலிதா தான்.

இதையும் படிங்க.!