chennireporters.com

மனிதன் இறக்கலாம். ஆனால் மனிதாபிமானம் இறக்ககூடாது.

தெரிந்துகொள்வதில் தவறில்லை.   உன்னுடைய மரணம்.  படித்ததில் பிடித்தது.

சமூக வலைதளங்களில் மரணம் தொடர்பான இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது மனித வாழ்வின் எதார்த்தத்தை சுட்டிக் காட்டுகிறது இந்த பதிவு.   ஒரு மனிதனின் மரணத்திற்குப் பிறகு என்னவெல்லாம் நடக்கும் என்பதை காட்டுகிறது இந்த பதிவு. எதார்த்தத்தின் உச்சம் இந்த பதிவு.

இந்த உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காது. உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார்கள்.

உனது ஆடைகளை களைவர்.  குளிப்பாட்டுவர்.  புது துணி அணிவிப்பர்.  உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர்.  அடக்கஸ்த்தலம் என்கிற புதிய இடத்திற்கு உன்னை எடுத்துச் செல்வார்கள்.   உன் மரணத்திற்காக கூடும் கூட்டம் பெரும்பாலும் உனது அனுதாபத்திற்காக அல்ல. உன் குடும்பத்தினர்கள் தவறாக நினைத்துவிடுவார்களோ என்கிற எண்ணத்தினால் தான் என்பதை நினைவுகொள்.

உனது கூட வரும் பலர் உன்னை அடக்கம் செய்வதிலேயே குறியாக இருப்பார்கள்.   நீ உபயோகித்த உன்னுடைய உடமைகள், உடைகள், புத்தகங்கள், பைகள், கண் கண்ணாடி, செருப்புகள் எல்லாம் வெளியேற்றப்படும். உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும், உன் வீட்டை விட்டும் பிரிக்கப்படும். அல்லது வெளியில் வீசப்படும்.

உன்னை விட்டு நீங்குவது…
1. உன் உயிர்  2. உனது அழகு 3. சொத்துக்கள். 4. பிள்ளைகள்5. வீடு, மாளிகைகள்
6. மனைவி மற்றும் பிள்ளைகள்….. இதில் உனக்கென்று எதனை தயாரித்து வைத்துள்ளாய்……?  உறுதியாக விளங்கிக்கொள்..

உனது பிரிவால் இந்த  உலகம் கவலைப்படாது. பொருளாதாரம் தடைப்படாது.   உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு வேறொருவர் சந்தோசமாக வருவார்.   உனது சொத்து வாரிசுகளுக்கு போய்விடும்.   எவ்வளவு சொத்து சுகத்தோடு வாழ்ந்தாலும் வெறும் கையுடன் தான் படுத்திருப்பாய்…..

 

நீ மரணித்தவுடன் முதலில் மறைவது உனது பெயரே….!!
(பிணம் அல்லது பாடி என்று மாறும்…..)  உன் உறவுகளே இப்படித்தான் அழைப்பார்கள்.

உன்னைப்பற்றிய கவலை மூன்று பங்காக பிரிக்கப்படும்.   உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்….பாவம் என்று….   நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பார்கள்…  உன் குடும்பத்தினர் சில மாதங்கள்  கவலைபடுவார்கள்….அவ்வளவுதான்.    பிறகு நீ ஒருத்தன் இருந்ததே மறக்கப்படும். மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.

உண்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பமாகப் போகிறது.  மனிதா….உனது குடும்ப கெளரவம், பணம், பட்டம், பதவி என்று வாழும் போதே ”வாழாமல்” உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்.  உன் மனைவி, குழந்தைகளுக்கு அத்தியாவசிய தேவைக்கு மட்டும் சேர்த்துவை.

அதிகமாக உழைத்து உன் வாழ்க்கையை வாழாமல் இழந்து விடாதே…  இறுதியில் உன்னுடன் வருவது…  நீ செய்த நற்காரியங்கள்..  நீ நன்முறையில் வளர்த்த உன் பிள்ளைகளின் பிரார்த்தனைகள்…  நீ செய்த உதவியும் மற்றும் தர்மங்கள்….  இதை மனதில் நிறுத்தி ஒவ்வொரு நாளும் செயல்பட்டால் இந்த உலகத்திலும், இறந்த பின்னும் நன்மையடைவாய்.

நல்லவனுக்கு மரணம் முடிவு இல்லை,  கொடியவனுக்கு மரணம் முடிவாகும்,
இன்று தெருவில், ஊரில், அலுவலகத்தில், அண்டைவீட்டில் ,  வயலில் – களத்தில்- களத்துமேட்டில் ,  எங்கும் மனித உள்ளங்களில் வாழ் ,  இதழ்கள் புன்னகை வீசட்டும் ,  அன்பு, கருணை கண்ணில் ஒளிரட்டும்,  கைகள் உதவிட எழும்பட்டும் . 

இல்லை மரணம் கவ்விவிடும்.  எரிமேட்டில் புகையாக வெளிப்படும்முன் ,  ஒருபிடி சாம்பலாக மாறும்முன்…  இல்லை கல்லறை கூட்டுக்குள் உடல் அடங்கும்முன்…  அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு.  பணத்தை கட்டி கொண்டு அழதே….  மற்றவர் மனம் நோகும்படி வாழாதே….  வாழ்க்கை என்பது ஓட்டப் பந்தயமல்ல….  நடை பழகும் நடைவண்டி….  அழகாய் வழி நடத்திடு உயிர் ஞான உணர்வை அடைந்திடு.  

இதையும் படிங்க.!