அவ்வை நடராசன் மறைவு! – தமிழ் உலகத்திற்குப் பேரிழப்பு! பழ. நெடுமாறன்.

November 22, 2022

By SS ரிஸ்வான்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை;

தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும். அவருடைய தந்தை முதுபெரும் தமிழறிஞர் அவ்வை சு. துரைசாமி பிள்ளை அவர்களின் மாணவனாக நானும், அவரின் மகனாக அவரும் மிக நெருங்கிப் பழகினோம். அது இரு குடும்பங்களின் நட்பாக மலர்ந்தது.

பேராசிரியராக, துணைவேந்தராக, தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத் துறையின் செயலாளராக, உலகத் தமிழ் மாநாடுகளை வெற்றிகரமாக நடத்துபவராக, மாறிமாறி யார் முதல்வராக வந்தபோதும் அவர்களால் மதிக்கப்பட்டவராக, தமிழ் இலக்கிய உலகின் சுடர் விளக்காக ஒளிர்ந்தவர்.

இனிய நண்பர் அவ்வை நடராசன் அவர்களின் மறைவின் மூலம் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவருடைய புதல்வர்கள் மற்றும் குடும்பத்தினரின் துயரத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன் என்று அறிக்கையில்  கூறியுள்ளார்.

 

Share:

SS ரிஸ்வான்

November 22, 2022

Leave a Comment