chennireporters.com

அக்டோபர் 31: இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)கட்சி அமைப்பு தினம்.

                      
                 இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு தினமாக தொடங்கப்பட்ட                         நாள் இன்று.

அஞ்ஞான வளர்ச்சியில் மனிதகுல வீழ்ச்சி
மெய்ஞானத் தோன்றல் வழியில் எழுச்சி
திருஞானச் சூரியன் காரல் மார்க்சின்
விஞ்ஞான ஒளியில் தோன்றிய கட்சி

 

சிவப்பான கட்சியின் அமைப்புதின நாளில்
சிறப்பான சமுதாய மாற்றம் தோளில்
நெருப்பாற்றில் சுமந்து நீந்தும் பயணம்
பொறுப்பாகத் தொடர ஆய்வுசெயும் தருணம்

ஏந்திய செங்கொடி தாழாது பறந்திட
சிந்திய செங்குருதியும் சேர்ந்து சிவந்திட
ஈந்த  இன்னுயிர்த் தியாகிகளை நினைந்திட
எந்தக் கட்சியினும் இக்கட்சி உயர்ந்திட

உறுதி யேற்றலும் உருக்கென நிற்றலும்
சுருதி குறையாது மார்க்சியம் பற்றலும்
கருதி கட்சிக் கல்வி கற்றலும்
உறுதி யாக்கும் வெற்றியை ஏற்றலும்

 

கொட்டிக் கொடுத்தும் வேண்டாம் என்போம்
கெட்டித் தட்டிய முதலாளியம் எதிர்ப்போம்
காட்டிய மார்க்சிய வழியில் நிற்போம்
ஈட்டிய வர்க்க ஒற்றுமை காப்போம்

அறுபத்து நான்கினில் உதித்த கட்சி
ஐம்பத்து ஆறாம் ஆண்டில் காட்சி
பலபத்து பலநூறு பல்லாயிரம் என்றே
நன்முத்து எனமிளிரும் தியாகிகள் நன்றே

வேற்றுமையில் ஒற்றுமை வாழும் மண்ணில்
ஒற்றுமையில் வேற்றுமை விதைக்கும் தன்னில்
காற்றென முளையில் கிள்ளி எறிதலில்
பற்றெனும் உழைக்கும் வர்க்க மேன்மையில்

விரிந்து பரந்தது இந்திய தேசம்
சரிந்த மானுடப் பன்முக நேசம்
மண்ணுக் கேற்ற மார்க்சியம் பேசும்
கண்ணெனும் தத்துவ நடைமுறை வீசும்

திரட்டுக வெகுமக்கள் திசை எங்கும்
கட்டுக செங்கொடி அமைப்பே தங்கும்
காட்டுக நேயம் தோழமை பொங்கும்
ஊட்டுக வர்க்க ஒற்றுமை தங்கம்

பிறக்கும் புத்துணர்வு  எங்கும் எழுச்சி
உருக்கு உழைக்கும் வர்க்கக் கட்சி
இருக்கு மக்கள் ஜனநாயகப் புரட்சி
சிறக்கும் பணியில் மார்க்சிஸ்ட் கட்சி .  என்று சிறப்பான கவிதையை எழுதி இருக்கிறார் தோழர்.  பெரணமல்லூர் சேகரன்.

இதையும் படிங்க.!