chennireporters.com

பழுதான இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையங்கள். சரி செய்யுமா நிர்வாகம்.

திருவள்ளூர், ஆவடி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையங்கள் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்கள் வேலை செய்யாமல் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் .அது தவிர தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருப்பில் இருக்கிறது.  பண பரிமாற்றம் தெரிந்து கொள்ள வைக்கப்பட்டுள்ள இயந்திரம்  வேலை செய்வதே இல்லை. குறிப்பாக ஆவடி, பூந்தமல்லி சாலையில் உள்ள இந்தியன் வங்கி சேவை மிக மோசமாக உள்ளது. குறிப்பாக அந்த வங்கி தற்போது புனரமைக்கப்பட்டு புதிதாக கட்டியும் கூட அதன் சேவையை  வழங்குவதில் தடை பட்டுள்ளது.  இருப்பினும் அந்த வங்கி கிளையில் உள்ள எந்த இயந்திரங்களும் செயல்படுவதே இல்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கிளை அலுவலரை சந்தித்து கேட்டால் இயந்திரம் பழுதடைந்துள்ளது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.சென்னைக்கு தகவல் சொல்லி இருக்கிறோம்.  உயர் அதிகாரிகள் இன்னும்  நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் இயந்திரம் பழுது பார்க்கும் பணி நடைபெறாமல் இருக்கிறது. விரைவில் சரி செய்வோம் என்கிறார்கள்.இதே நிலைதான் திருநின்றவூர், திருவள்ளூர், பட்டாபிராம், பல்லாவரம், பம்மல், தாம்பரம் போன்ற அனைத்து பகுதிகளிலும் இந்தியன் வங்கியின் சேவை மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது. எனவே மத்திய அரசு இந்தியன் வங்கியின் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் பொதுமக்களின் சிரமம் தவிர்க்கப்படும் என்கிறார்கள் பொது மக்கள்.இந்தியன் வங்கிக் கிளையின் பணியாற்றும் முக்கிய பொறுப்பில் உள்ள கிளை மேலாளர்கள் பெரும்பாலும் வடநாட்டவர்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால்  தமிழ் மக்களின் சிரமம் பற்றி அவர்கள் பெரிதும் கவலைப்படுவதில்லை.எனவே தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு  பொதுமக்களின் நலன் காப்பதில் இந்தியன் வங்கியின் சேவை மிகவும் தரம் குறைந்துள்ளது அதை சரி செய்து தர வேண்டும் என்கின்றனர் மூத்த குடிமக்கள்.

 

இதையும் படிங்க.!