அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம் பெண் பொறியியல் பட்டதாரி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் இரண்டு தினங்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்த போது அந்த பகுதிக்கு வந்த இரண்டு இளைஞர்கள் அந்தப் பெண்ணின் காதலனை அடித்து உதைத்து விரட்டியடித்துள்ளனர்.

அப்போது தனிமையில் இருந்த அந்த மாணவியிடம் ஒருவன் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கைது செய்யப்பட்ட ஞானசேகரன்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவர் மீது கோட்டூர்புரம், மயிலாப்பூர், வேளச்சேரி, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர் கோட்டூர்புரம் மண்டபம் தெரு பகுதியில் நடை பாதையில் பிரியாணி கடை நடத்தி வருவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று 23-ம் தேதி பிரியாணி கடையில் விற்பனை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்றதும் அங்கு தனிமையில் இருந்த காதலர்களை தனது மொபைலில் வீடியோ பதிவு செய்ததும் பின்பு அந்த பதிவை காட்டி மிரட்டி சமூக வலைத்தளங்கள் போட்டு விடுவதாக கூறி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஞானசேகரன்.
பணம் தர மறுத்ததைத் தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் மாணவியின் காதலனை அடித்து உதைத்து விரட்டி உள்ளார். அதன் பின்னர் தனியாக இருந்த மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். தினம்தோறும் இரவு நேரங்களில் பிரியாணி கடையின் விற்பனை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த காட்டுப் பகுதிக்கு செல்வதும் அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக கடந்த 23ஆம் தேதி தனிநபராகச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தனிமையில் இருக்கக்கூடிய காதலர்களிடம் தான் போலிஸ் என கூறி மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள இவரின் செல்போனில் இருந்து பல வீடியோக்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இவர் மீதுள்ள வழக்குகளை போலிசார் தூசி தட்டி எடுத்து விசாரிக்க தொடங்கியுள்ளனர். இவரால் பாதிக்கப்பட்டவர்களிடம் போலிசார் தனியாக அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
