chennireporters.com

தேசிய பத்திரிகையாளர்கள் தினம் அரசியல் தலைவர்கள் வாழ்த்து.

உண்மை எதுவென்று மக்களுக்கே நேர்மையுடன் சொல்வதே இதழியலின் அறம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

.

தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை ஒட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், வைகோ, பாமக  ராமதாஸ், பாஜக தலைவர் அண்ணாமலை, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் டிடிவி தினகரன் என பலர் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர் 16ஆம் நாள் தான் தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

 

ஜனநாயகத்தை கட்டி காப்பதில் முக்கிய பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளை கௌரவிக்க தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

 

அதில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்கு சொல்வதே இவைகளின் அறம் சார்ந்து செயல்படும் இதழிய வேளாளர்களுக்கு தேசிய பத்திரிகையாளர் தினம் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சிறப்பினும் செல்வமும் ஈனும் அறத்திலும் ஓங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு என்று தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.  ராமதாஸ் கத்தி முனையை விட பேனா முனை வலிமையானது பேனா முனைகள் இல்லாமல் இந்திய ஜனநாயகம் இல்லை. நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்று தூண்களுடன் இணைந்து ஜனநாயகத்தை காக்கும் நான்காவது தூண்களுக்கு தேசிய பத்திரிகையாளர் நாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

அண்ணாமலை குறளற்றவர்கள் குரலாய் சமூகம் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி வரும் பத்திரிகையாளர்களின் பங்களிப்பை தேசிய பத்திரிகை தினத்தில் நினைவுகூர்ந்து உண்மையை உரக்கச் சொல்லும் பத்திரிகையாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  இந்த நன்னாளில் வார இதழ் மற்றும் தினசரி தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள்  youtube  உள்பட பணியாற்றும் செய்தியாளர்கள் உண்மையை உணர்ந்து யார் சொன்னார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட்டு நேர்மையுடன் உண்மைக்கு புறம்பாக செய்தியை வெளியிட  கூடாது என்பதை முதல்வர் தனது வாழ்த்து செய்தியின் மூலம் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.

எனவே நாம் நேர்மையுடன் பணியாற்றுவோம் என்று இந்நாளில் உறுதியோற்போம்.

இதையும் படிங்க.!