chennireporters.com

#social media with thiruporur mla ; சமூக வளைதளத்தில் சந்தி சிரிக்கும் திருப்போரூர் விசிக எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி..

ஹெலிகாப்டர் நிறுவனத்திடம் மிரட்டி கட்டிங் கேட்ட திருப்போரூர் விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் சிட்டிங்  எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி மீது தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவிடம் புகார் கொடுக்கப்பட்டது இந்த புகார் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் பல்வேறு புதிய அதிர்ச்சி தரும் தகவல்களும் எழுந்த வண்ணம் உள்ளது.

எஸ் எஸ் பாலாஜி.

இது தொடர்பாக நேற்று அனைத்து பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்கள் இணையதளங்களில் எஸ் எஸ் பாலாஜி பற்றி பலர் செய்தி வெளியிட்டு இருந்தனர் இந்த நிலையில் அந்த செய்தியின் பின்னூட்டமாக சமூக வலைதளங்களில் சந்தி சிரிக்கும் அளவிற்கு எஸ் எஸ் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பொதுமக்கள் கடுமையான விமர்சனத்தையும் கமெண்ட்டுகளையும் அடித்து வருகின்றனர். 

முதலில் ஹெலிகாப்டர் நிறுவனத்திற்கும் எஸ் எஸ் பாலாஜிக்கும் எப்படி பிரச்சனை எழுந்தது என்பதை விடுதலை சிறுத்தை கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் நிறுவனத்தினர் தங்களது தொழிலை தொடங்கிய போது அமைச்சர் தா.மோ. அன்பரசனை வைத்து விழாவை தொடங்கி வைத்தனர். அந்த விழா அழைப்பிதழில் விடுதலை சிறுத்தைகளின் கட்சி சிட்டிங் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜியின் பெயர் போடவில்லை. இதிலிருந்து தான் பிரச்சனை தொடங்கியது என்கிறார்கள்.

அதன் பிறகு விழாவிற்கு வாருங்கள் என்று நேரில் சென்று சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்ததும் அவர் வர மறுத்து விட்டார். அது தவிர கடுமையான வார்த்தைகளில் பேசி திட்டி வெளியேற்றி விட்டார் என்று சொல்கிறார்கள் சம்பந்தப்பட்ட கம்பெனி நிர்வாகத்தினர்.

நான் இல்லாமல் எப்படி நீங்கள் உங்களது தொழிலை நடத்துகிறீர்கள் நான் பார்த்துக் கொள்ளுகிறேன் இந்த தொகுதிக்கு நான் எம்எல்ஏ வா அன்பரசன் எம்எல்ஏ வா? என்று மீசையை முறுக்கி மாறு தட்டிக் கொண்டாராம் எஸ் எஸ் பாலாஜி. அதன் பிறகு ஆட்களை வைத்து மிரட்டுவதும், வியாபாரத்தை தொடங்க விடாமல் பல்வேறு வழிகளில் சதி செய்து தடுத்து நிறுத்தியதால் மன உளைச்சலில் அடைந்த நிர்வாகத்தினர் மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது எஸ் எஸ் பாலாஜி பள்ளி மாணவர்கள் சென்று வர பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் 4 வேன்களை வாங்கி தாருங்கள் என்று கேட்டிருக்கிறார்.  அவர்கள் அதற்கு ஒரு வேனை மட்டும் வாங்கித் தருவதாகவும், மீதி 3 வேன்கள் பற்றி நிர்வாகத்திடம் பேசிவிட்டு உங்களுக்கு பதில் சொல்லுகிறோம் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறனர். அதன் பிறகு நிர்வாகத்தினர் எஸ் எஸ் பாலாஜி கேட்ட பேனை வழங்கவில்லை இதில் கடும் மன உளைச்சல் அடைந்த விடுதலை சிறுத்தைகளின் கட்சி எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி நேரடியாகவே ஹெலிகாப்டர் நிர்வாகத்தினரிடம் மோதத் தொடங்கினார்.

அதில் தான் வடிவேல் காமெடியைப் போல ஹெலிகாப்டர் ஓட்டுபவனுக்கு லைசென்ஸ் இருக்கிறதா அந்த ஹெலிகாப்டர் எப்போது தயாரிக்கப்பட்டது அதன் தன்மை என்ன என்று மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கேட்கும் கேள்வியை விடுதலை சிறுத்தைகளின் கட்சி எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி கேட்டது அந்த நிர்வாகத்தினருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

எங்களுக்கு அனைத்து சான்றிதழ்களும் ஹெலிகாப்டர் ஓட்டும் கேப்டனுக்கு அனைத்து லைசென்ஸ் மற்றும் சிவில் விமான போக்குவரத்து ஆவணங்கள் அனைத்தும் உள்ளது என்று கூறியும் இவர் ஏற்றுக் கொள்ளாமல் கடுமையான வார்த்தைகளில் மிரட்டி உள்ளனர்..

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நிறுவனத்தினர் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர் அவரும் சமரசம் பேசி தருவதாக சொல்லி அனுப்பி இருக்கிறார். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால். எஸ் எஸ் பாலாஜி தான் ஒரு ஜீனியஸ் என்கிற எண்ணத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து அதாவது தனக்கு வேண்டப்பட்ட சில ஜால்ராக்களை வைத்து ஒரு பேட்டி ஏற்பாடு செய்து சில ரூபாய் நோட்டுக்களை கவரில் போட்டு தான் ஒரு யோகிய சிகாமணி என்று மார்தட்டிக்கொண்டார் ஆனால் இவர் பேசிய ஆடியோக்கள் வீடியோக்கள் எல்லாம் அந்த நிறுவனத்திடம் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடமும் இருக்கிறது என்கின்றனர் விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் மொத்த நிர்வாகிகள்.

இது பரவாயில்லை கட்சியின் தலைமையில் உள்ள முக்கிய தலைவர்களைப் பற்றியும் தலைவர் திருமாவளவனை பற்றியும் கிழக்கு கடற்கரை சாலையில் சில தனியார் அவுட் ஹவுஸ்களில் உட்கார்ந்து தண்ணி குடித்ததும் பொல்லாதவனைப் போல பல செய்திகளை பேசியிருக்கிறார் அதற்கெல்லாம் தலவர் திருமா இப்போது முடிவு கட்டுவார் என்கின்றனர் தலைவரின் வலது இடது கரங்கள்.

எக்ஸ் ஸ்தலம் மற்றும் முகநூல், whatsapp, instagram போன்ற சமூக ஊடகங்கள் வழியாக பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை ஆபாசமாகவும் கொச்சையாகவும் சிலர் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

அதை வாசகர்களுக்கு நாம் அப்படியே வழங்குகிறோம் இதில் எந்த விதத்திலும் நமது நிறுவனத்தின் சார்பில் எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை பொதுமக்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டதை நாம் அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்து வாசகர்களுக்கு வழங்கியுள்ளோம் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை வழங்கியதற்கு எந்த விதத்திலும் சென்னை ரிப்போர்ட்டர்ஸ் டாட் காம் இணையதளம் பொறுப்பாகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதையும் படிங்க.!