ஒரு வருடத்திற்கு முன்பு அதாவது 2023 ஜூலை மாதம் 10ஆம் தேதி ஆவடியில் இருந்து சப் ரிஜிஸ்டர் மல்லிகேஸ்வரி நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஒரு வருடம் ஐந்து மாதங்கள் மட்டுமே அந்த இடத்தில் மல்லிகேஸ்வரி பணியாற்றினார். அதிலும் பனிக்காலங்களில் பணிக்கு செல்லாமல் பல மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தனது சொந்த மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற்று வர வேண்டும் என்று கடந்த ஒரு வருடங்களாக மல்லிகேஸ்வரி முயற்சி செய்து வந்தார்ந்தார். அதன் அடிப்படையில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு ரூபாய் 65 லட்சம் பணம் லஞ்சமாக கொடுத்துவிட்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பணி மாறுதல் பெற்று வந்துவிட்டார்.
பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி
இந்த பணி மாறுதலுக்காக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தரப்பினருக்கு 65 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக தெரிகிறது. மல்லிகேஸ்வரி ஏற்கனவே கடந்த காலங்களில் ஆரணி பகுதியில் சப் ரிஜிஸ்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் தான் வேலை செய்த அதே இடத்திற்கு பணி மாறுதல் பெற்று வந்துள்ளார் மல்லிகேஸ்வரி. மல்லிகேஸ்வரி மீது ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு நிலுவையில் உள்ளது.
ஆவடியில் பணியாற்றிய போது அரசுக்கு சொந்தமான பல நிலங்களை போலிப் பட்டா தயாரித்து எடுத்து வந்தவர்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் லஞ்சப் பணம் வாங்கிக்கொண்டு பத்திரப்பதிவு செய்துள்ளார் மல்லிகேஸ்வரி.
அது தவிர லஞ்ச ஒழிப்புத்துறையில் அவர் மீது தனியாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் அவர் மீது தனியாகவும் புகார் சொல்லப்பட்டு, வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோதி நிர்மலா சாமி ஐ.ஏ.எஸ்
சேர்க்காடு கிராமம், சர்வே எண் 149/4 பட்டா எண் 536 என்ற இடத்தை அதாவது 40 சென்ட் காலி மனை ஏறக்குறைய 17,646 சதுர அடிகள் கொண்ட இடம் பால் மூர்த்தி என்பவருக்கு சொந்தமானது. இந்த இடத்தை ஆவடி, விளிஞ்சியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நாராயண பிரசாத், பாபு, விஜயலட்சுமி ஆகியோர் போலி ஆவணம் தயார் செய்து நிலத்தின் உரிமையாளர் பால் மூர்த்தி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வராமலேயே இடத்தை பதிவு செய்துள்ளார் மல்லிகேஸ்வரி.

அதேபோல பட்டாபிராம் தண்டரை பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை அதே பகுதியை சேர்ந்த விநாயகம் மகன் அமுலு என்பவருக்கு போலியான ஆவணம் என்று தெரிந்தும் கூட மல்லிகேஸ்வரி லஞ்சம் வாங்கிக் கொண்டு இடத்தை அவர் பெயருக்கு பதிவு செய்து கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட பதிவாளர் மற்றும் பத்திரப்பதிவுத்துறை தலைவர் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறை என அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அளித்திருக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜாய் தயால் தலைமையில் ஆவடி பத்திரபதிவு அலுவலகத்தில் சோதனையும் நடத்தப்பட்டது அந்த சோதனையில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாயும் பல முக்கிய ஆவணங்களும் சிக்கியது.
அந்த வழக்கு எந்த முன்னேற்றம் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. ஆவடியில் மல்லிகேஸ்வரி பணியாற்றிய கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சம்பாதித்த சொத்து மதிப்பு மட்டும் 50 கோடியை தாண்டும் என்கிறார்கள். டாக்குமெண்ட், செட்டில்மெண்ட் பத்திரம் , லே-அவுட் , கமர்சியல், தனிமனை பட்டா பத்திரப்பதிவு, ஷ்பெஷல் டாக்குமெண்ட் ஆகியவற்றில் சம்பாதித்த வருமானம் 50 கோடியை தாண்டும் என்கிறார்கள்.
தான் சம்பாதித்து வைத்துள்ள லஞ்சப்பனத்தில் தான், அமைச்சர் மூர்த்தி தரப்பினருக்கு 65 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து விட்டு ஒரே ஆண்டில் தனது சொந்த மாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற்று வந்துள்ளார் மல்லிகேஸ்வரி . ஆவடியில் மல்லிகேஸ்வரி பணியாற்றிய காலகட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை சிபிஐ ஆய்வு செய்ய வேண்டும். பனிக்காலத்தில் ஏற்பட்ட முறைகேடுகளை தீவிரமாக ஆராய வேண்டும் ஏறக்குறைய அரசுக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் வகையில் கட்டிடம் மற்றும் மனைகளின் மதிப்பு தன்மையை குறைத்து பத்திர பதிவு செய்துள்ளார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பத்திரப்பதிவுத்துறை செயலாளராக பணியாற்றிய நேர்மையின் சிகரமாக விளங்கிய ஜோதி நிர்மலா சாமி பத்திர பதிவுத்துறையில் ஊழலை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிற பத்திரப்பதிவாளர்களை உடனடியாக பணி மாற்றம் செய்து வந்தார். அது தவிர அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து தண்டித்து வந்தார்.
எந்தவித அழுத்தங்களுக்கும் ஆளாகாமல் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பத்திரப்பதிவாளர்களுக்கு ஒருபோதும் உறுதுணையாக அவர் செயல்பட்டது இல்லை. இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 66 பத்திரப்பதிவு அலுவலர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
திருமதி; ஜோதி நிர்மலா சாமி ஐ.ஏ.எஸ் அவர்கள்.
ஜோதி நிர்மலா சாமி அவர்கள் இந்த துறையில் இருந்தால் தங்களுக்கு நினைக்கிற படி பதவிகளையும் பொறுப்புகளையும் பெற முடியாது என்று சொல்லி அரசுக்கு அழுத்தம் கொடுத்தே அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டார் என்கிறார்கள் சில நேர்மையான அதிகாரிகள்.
பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவி பதிவுத்துறை சிறப்பு விழிப்பு குழுவை சார்ந்த கண்ணன் என்கிற அதிகாரி மல்லிகேஸ்வரிக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்து வருகிறார் என்கிற புதிய குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் அவரால் பாதிக்கப்பட்டவர்கள்.
இதுகுறித்து உதவி பதிவுத்துறை நிர்வாகம் அதிகாரியாக உள்ள சுதா மால்யா அவர்கள் மல்லிகேஸ்வரியின் தொடர்பாக தனி விசாரணை கமிட்டி அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்கின்றனர் மல்லிகேஸ்வரி யால் பாதிக்கப்பட்டவர்கள்.
இப்படி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள மல்லிகேஸ்வரி அவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி அவர்கள் எப்படி பணி மாறுதல் வழங்கி உத்தரவு போட்டார் என்கிற கேள்வியை எழுப்புகின்றனர் பொதுமக்களும் அவர் துறை சார்ந்த அதிகாரிகளும்.
