#tamarind fruit can fix microplastic; மனித உடலில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை சரி செய்யும் புளியம் பழம்.

March 31, 2026

By தேவா ஹேமா

ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் புளியம்பழம், மனித உடலில் ஊடுருவியுள்ள நுண்பிளாஸ்டிக் (Microplastics) துகள்களை வெளியேற்ற உதவும் என அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டார்லேடன் ஸ்டேட் பல்கலைக்கழக (Tarleton State University) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மனித ரத்தம், உறுப்புகள் மற்றும் மூளை திசுக்கள் வரை ஊடுருவி நீண்டகால ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்த நுண்பிளாஸ்டிக் துகள்களை உடல் இயற்கையாக வெளியேற்றுவது மிகவும் கடினமான ஒன்றாகும்; இந்நிலையில், புளியங்கொட்டையில் உள்ள சில குறிப்பிட்ட கூட்டுப் பொருட்கள் இந்த நுண்பிளாஸ்டிக் துகள்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி, அவற்றை உடலில் இருந்து பிரித்தெடுத்து கழிவுகள் வழியாக வெளியேற்ற உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்படுத்தப்பட்ட சோதனைச் சூழலில், புளி சாற்றை உட்கொண்டவர்களின் உடலில் இருந்து அதிக அளவிலான நுண்பிளாஸ்டிக் துகள்கள் வெளியேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரியல் அமைப்புகளில் இருந்து பிளாஸ்டிக் நச்சுக்களை அகற்றத் தாவர அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டறியும் முயற்சியில், புளியின் இந்த மருத்துவக் குணம் ஒரு முக்கியத்திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

 

உலகத்திலேயே குறிப்பாக தமிழகத்தில் மட்டும்தான் புளியை அனைத்து விதமான உணவு வகைகளிலும் பிரதானமாக விளங்குகிறது.

மனிதர்கள் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டாலும் கூட அதை ஜீரணம் செய்வதற்கு புளி ரசம் தேவைப்படுகிறது.

அதேபோல மீன் குழம்பு, புளி குழம்பு, மோர் குழம்பு, காரக்குழம்பு என அனைத்து வகைகளிலும் புளி பிரதானமாக விளங்குகிறது. அது மட்டும் இல்லாமல் பிரியாணிக்கு வைக்கப்படும் கத்திரிக்காய் கூட்டுவில் புளி சேர்க்கப்பட்டு அதன் சுவையை அதிகப்படுத்துகிறது.

இப்படி தமிழர்களின் பாரம்பரிய உணவு வகையிலிருந்து இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையிலும் அது பயன்படுத்தப்படுகிறது.

Share:

தேவா ஹேமா

March 31, 2026

Leave a Comment