உலகில் அபாயகரமான நாடு பாக்கிஸ்த்தான் – அமெரிக்க அதிபர் கண்டனம்
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அறிக்கை
“உலக அணு அமைப்புக்கு முரண்பாடான வகையில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகித்தான் மிகவும் அபாயகரமான நாடு” என அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அணிசாரா நாடுகளை ஒன்றிணைத்தும், சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவு கொண்டிருந்த இந்தியாவுக்கு எதிராக பாகித்தானுக்கு ஆயுதங்களை அள்ளி அள்ளி வழங்கி அதை வளர்த்துவிட்ட குற்றவாளி அமெரிக்காதான்.
இப்போது தனக்கு எதிரான முகாமில் பாகித்தான் இணைந்திருப்பதினால் பைடன் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்.
உலகெங்கும் நேட்டோ, சீட்டோ போன்ற பல நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்கி அவற்றுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கிவரும் போக்கினை அமெரிக்கா கைவிடாவிட்டால், அந்நாடுகளும் பாகித்தானைப் போல உலக அமைதிக்கு அபாயகரமான நாடுகளாக மாறும். என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.