#TN assembly election 2026#
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்ததில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக அந்த கட்சியை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் வேதனையில் உள்ளதாக தெரிகிறது.
S.S. பாலாஜி.
திருப்போரூர் தொகுதி தற்போதைய எம்எல்ஏ எஸ். எஸ். பாலாஜி மீண்டும் அந்த தொகுதியில் நிற்பேன் இல்லை என்றால் எனக்காக ஒரு பொது தொகுதியை தலைவர் வாங்கித் தருவார் என்று அவர் பேசி வந்தார்.
அது மட்டும் இல்லாமல் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஹெலிகாப்டர் நிறுவனம் தொடர்பான புகாரில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.
தனக்கு சீட்டு வழங்கவில்லை என்றால் திருமாவளவன் பற்றி பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிடுவேன் என்று போதையில் பல இடங்களில் பேசியதாக நாம் ஏற்கனவே பல செய்திகளை நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்.
சில டுபாக்கூர் யூடியூப் சேனல்களில் பணம் கொடுத்து தனக்கு ஆதரவாக அவர் செய்தி வெளியிட வைத்தார்.
share.chennai reporters/web.com
நமது அலுவலகத்திற்கும் சில பெண்களை பேச வைத்து விளம்பரம் தர வேண்டும் உங்கள் அலுவலகம் எங்கே இருக்கிறது? நீங்கள் யார் என்று நமது அலுவலகத்திற்கும் வந்து உழவு பார்த்துவிட்டு சென்றனர்.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில் எஸ். எஸ். பாலாஜிக்கு சீட்டு வழங்கப்படவில்லை.
அதேபோல மேடையில் முழங்கி வந்த ஆளூர் ஷாநவாசுக்கும் சீட்டு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தொகுதிக்கு சம்பந்தமில்லாத பலரை தலைவர் நிறுத்திருக்கிறார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
சமரன் திருப்போரூர்.
பல ஆண்டுகளாக திருப்போரூரில் தலித் மக்கள் வாழும் தொகுதியில் முருகன் கோவில் தேர் வராது.
இதை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வெற்றியான தீர்ப்பை பெற்று தலித் மக்கள் வாழும் பகுதிக்கு முருகன் கோவில் தேரை கொண்டு வந்தவர்.
மக்கள் பிரச்சினை என்றால் உடனடியாக வீதிக்குச் சென்று போராடக் கூடியவர்.
ஏற்கனவே பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
மிகச் சிறந்த களப்பணியாளர்.
தொகுதி மக்களிடையே நல்ல பெயர் பெற்றவர் இவருக்கு திருப்போரூர் தொகுதியை வழங்கி இருந்தால் எளிதில் வெற்றியை பெற்று இருப்பார்.
வேறு ஒருவருக்கு பணபலம் படைத்தவருக்கு சீட்டு ஒதுக்கப்பட்ட உள்ளது. மக்களிடையே பெரும் வருத்தத்தையும் சிறுத்தைகளின் மனதில் பெரும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கட்சியின் மூத்த நிர்வாகியும் பல ஆண்டுகள் கட்சிக்காக உழைத்த செய்தி தொடர்பாளர் பாவலன் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தற்போதைய வேட்பாளராக களத்தில் நிற்கும் ஆற்றலரசு அவர்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.
இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை சட்டமன்றத் தொகுதிக்கும் ஒருமுறை மதுரை பாராளுமன்ற தொகுதிக்கும் தேர்தலில் நிற்க வாய்ப்பு அளித்துள்ளார்.
இருப்பினும் இந்த நிலையில் மீண்டும் அவருக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
பாவலனுக்கு தான் தர வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்த தலைவர் திருமாவளவனை ஆற்றலரசு மிரட்டும்தொணியில் பேசியும் கடைசி நேரத்தில் அழுதும் தற்கொலை செய்து கொள்வேன் எனக்கு இது கடைசி வாய்ப்பாக இருக்கட்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி காலில் விழுந்து கவுண்டமணி கதையாக சீட்டை வாங்கிச் சென்று விட்டார்.
பாவலன் செய்தி தொடர்பாளர்.
ஆனால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றார்கள் பெரியகுளம் தொகுதி பொதுமக்கள். ஆனால் பாவலன் சொந்த தொகுதி கட்சி பலமாக இருக்கிறது.
கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஆற்றலரசுக்கு தொகுதியில் நல்ல பெயர் இல்லை என்பதை வெளிப்படையாகவே தெரிந்தும் கூட தலைவரிடம் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி சீட்டு வாங்கியது பெரும் பேசு பொருளாகியுள்ளது.
ஆனால் தனக்கு சீட்டு கிடைக்கும் என்று நினைத்திருந்த பலருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துவிட்டார் தலைவர் என்கிறார்கள் விசக நிர்வாகிகள்.
பெரியகுளம் தொகுதி வேட்பாளர் ஆற்றலரசு.
தலைவர் திருமா பலவீனமானவரா?
எவ்வளவு பலமான வீரமான தலைவர் தற்போது பலவீனம் ஆகிவிட்டார் என்றும் ஆற்றலரசின் செய்தி கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் தெரிந்ததும் இனிமேல் தலைவரிடம் சென்று செத்து விடுவேன், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினால் சீட்டு கிடைத்துவிடும் என்கிறார்கள்.
சிறுத்தைக்கு வயதாகி விட்டதா?
ஆனால் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் தலைவர் ஒரு திடமான நம்பிக்கையை தனது தொண்டர்கள் மீது வைத்திருக்கும் தலைவர் சுயமாக உறுதியுடன் ஒரு முடிவு எடுக்க முடியாமல் மிரட்டலுக்கு அஞ்சி ஒரு தொகுதியை தோல்வியடைய செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது வேதனைக்குரியது என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.
share.chennai reporters/web.com
இந்த நிலையில் வலியும், வேதனையும் என் மனதில் நிறைய உள்ளன. வேட்பாளர்களை நான் தேர்வு செய்கின்ற கடைசி தேர்தல் இது என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிட 2000 மனுக்கள் தரப்பட்ட நிலையில் எட்டு பேருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சிக்கு ஆளாக கூடும் எனவே கவலைப்படாமல் தனக்கு தகுதி இல்லை என்று நினைக்க வேண்டாம் ஒவ்வொரு தொகுதிக்கு ஒருவரை தான் தேர்வு செய்ய முடியும்.
எங்கே தோழர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருந்த வேண்டாம் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றி எட்டு பேரையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இதுதான் நான் வேட்பாளர்களை தேர்வு செய்கின்ற கடைசி தேர்தல் என்பதை வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தேர்தலை எதிர்கொள்ள நெருக்கடிகள் இருந்த நிலையிலும் வலதுசாரிகள் மதவாதிகள் வலுப்பெற்றுவிடக்கூடாது என்பதற்காக திமுகவுடன் கைகோர்த்து இருக்கிறோம். பல்வேறு வழிகள் இருந்தாலும் கூடுதல் தொகுதிகள் கேட்டும் பெற முடியாத வருத்தம் உள்ளது. குறிப்பாக அரூர் தொகுதியை கேட்டு பெற முடியாமல் போனதற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமா பலவீனமான தலைவரா ?
இன்னும் பல வழிகள் இருக்கின்றன இதுதான் தேர்தல் அரசியல். இதனை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. நெருக்கடியை கடந்து செல்ல வேண்டும். நாம் மகத்தான அரசியல் சக்தி என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தற்போது உள்ள அரசியல் சூழலை அறிந்து எதிர்காலத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். வேதனையோடு இந்த பட்டியலை வெளியிடுகிறேன் என்று வேட்பாளர் பட்டியலை அறிவித்து உருக்கமாக பேசியிருக்கிறார் திருமா.
பாவலன். செய்தி தொடர்பாளர்.
இருப்பினும் ஏறக்குறைய 30 ஆண்டுகள் கட்சிக்கு உழைத்த ஒரு மூத்த நிர்வாகிக்கு சீட்டு வழங்காமல் போனது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் கட்சி நிர்வாகிகளும் பெரிய குளம் தொகுதி விடுதலை சிறுத்தைகளும்.
இனிமேலாவது எந்த முடிவுகளை எடுத்தாலும் திடமாக எடுக்க வேண்டும் ஒன் மேன் ஆர்மியைப் போல ஜெயலலிதா தனது கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் எப்படி கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரோ அந்த கட்டுப்பாட்டுடன் இயக்கத்தை நடத்தி செல்ல வேண்டும் என்கின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
இந்த செய்தி குறித்து கட்சி தலைமை சார்பில் விளக்கம் அளித்தாலும் அல்லது வேட்பாளர் சார்பில் விளக்கம் அளித்தாலும் அதை நாம் வெளியிட தயாராக இருக்கிறோம்.
