# laid straw on the road; ரோடு மேல ரோடு, பில்லு மேல பில்லு. சாம்பல் மண் சாலை மீது வைக்கோல் போட்ட அதிகாரிகள்.

January 31, 2026

By இரா. தேவேந்திரன்.

சிமெண்ட் ரோடு போட்டு ஒன்றரை மாதம் கழித்து ரோடு உறுதியாக இருப்பதற்கு வைக்கோல் போட்ட அதிகாரிகள் குறித்து ஆவடி மாநகராட்சி 23 வது வார்டு பொதுமக்கள் கேலியும் கிண்டலுமாய் பேசி வருகின்றனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

,

ஆவடி மாநகராட்சி 23 வது வார்டு பகுதியை சேர்ந்தது காந்திநகர் மேற்கு நாசர் சாலை, தென்றல் தெரு, தென்றல் தெரு அருகில் உள்ள சில சிறிய குறுக்கு சாலைகள் உள்ளன.

இந்த சாலை போட திட்டமிட்டதிலிருந்து பல்வேறு குழப்பத்திலேயே ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் வேலை செய்து வந்தனர்.

பாதாள சாக்கடை அமைத்த பிறகு, டெலிபோன் நிறுவனத்தினர் வருவார்கள் அவர்கள் பள்ளம் தோன்றுவார்கள். அவர்கள் பள்ளம் தோன்டிய பிறகு மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் வந்து மீண்டும் பள்ளம் தோண்டி குழாய் போடுவார்கள் அவர்கள் பள்ளம் தோண்டி குழாய் போட்ட பிறகு லோக்கல் கேபிள் டிவி நிறுவனத்தினரும் இன்டர்நெட் நிறுவனத்தினரும் மீண்டும் பள்ளம் தோண்டி ஒரு இணையதள கேபிள்களை வைத்து மூடுவார்கள். இப்படியே பல தடவை பல அதிகாரிகள் பள்ளம் தோண்டினார்கள். இந்த நிலையில் ஒரு வழியாக கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி சிமெண்ட் சாலை என்ற பெயரில் சாம்பல் மண் சாலையை போட்டு முடித்தனர்.

அந்த சாலையில் சிமெண்டின் தரம் குறைந்த அளவில் உள்ளது. சாதாரண புழுதி மண் சாலையைப் போல வாகனங்கள் சென்றால் எம் சான்ட் மண் சாலையில் புழுதி பறப்பதை போல பறக்கிறது.

இது இப்படி என்றால் ஏறக்குறைய ஒன்றரை மாதங்கள் கழித்து இரண்டு தினங்களுக்கு முன்பு சாலை தரம் உறுதியாக இருப்பதற்கு வைக்கோல் போட்டு தண்ணீரை ஊற்றினார்கள். இது தான் காமெடியிலும் காமெடி.

இதைப் பார்த்த காந்தி நகர் மேற்கு பகுதி மக்கள் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை இந்த வைக்கோல் போட்ட நிகழ்வு வெளிப்படையாகவே தெரிகிறது என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ரோடு மேல ரோடு பில்லு மேல பில்லு சாம்பல் மண் சாலை மீது வைக்கோல் பேட்டை அதிகாரிகள் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் எக்ஸ் தல பக்கத்திலும் சில பொதுமக்கள் சாலையில் வைக்கோல் போட்டதை படம் எடுத்து பதிவு செய்து வருகின்றனர்.

ஆவடி மாநகராட்சி ஆணையர். 

23 வது வார்டின் கவுன்சிலராக இருப்பவர்சூரியகுமார். இவர் வைகோ கட்சியை சார்ந்தவர். இவர் ஆவடி மாநகராட்சியின்  துணை மேயராக  இருந்து ஒருகிறார். இவருக்கு தெரிந்து தான் இந்த வேலை நடந்ததா அல்லது சிமெண்ட் சாலை போடுவதற்கு ஒப்பந்தம் வேறு யாருக்காவது வழங்கப்பட்டதா? வேலை நடந்த இடத்தில் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் ஒருவர் கூட வந்து ஆய்வு செய்யாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் பொதுமக்கள்.

ஆவடி மாநகராட்சி 23வது வார்டு கவுன்சிலர் சூர்யகுமார்.

தற்போது நாசர் சாலையில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை சிமெண்ட் சாலை அல்ல.!! எம்சாண்ட் சாம்பல் மண் சாலையாகவே இருப்பதாக பொதுமக்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். வேண்டுமானால் தகுதி வாய்ந்த பொறியாளர்களைக் கொண்டு சாலையின் தரம் என்னவென்பதை ஆராய்ந்து ஆய்வு அறிக்கை வெளியிட ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் தயாராக இருக்கிறார்களா என்கின்றனர் பொதுமக்கள்.

இதுகுறித்து 23 வது வார்டு கவுன்சிலரும் ஆவடி மாநகராட்சியின் துணை மேயருமான சூரியகுமார் அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

அமைச்சர் மற்றும் ஆவடி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. நாசர்.

ஆவடி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் அமைச்சர் நாசர் தனது பெயரில் உள்ள சாலை தரமாக போடாதது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு தரமான சாலை அமைக்க வேண்டும் என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

நாம் தமிழர் கட்சியினரும் டி.வி.கே.  கட்சியினரும் ஆட்சி முடியும் கடைசி  நேரத்தில் கூட திமுகவினர் ஊழல் செய்து வருகின்றனர்.  தரம் இல்லாத சாலைகளை அதிகாரிகள் எப்படி போட அனுமதித்தனர் என கேள்வி எழுப்பி வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தை ஆளுங்கட்சியினரும் திமுகவின் கூட்டணியில் இருக்கும் கட்சியினரும் பொதுமக்களின் வரிப்பணத்தை இப்படி கொள்ளையடிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றனர்.

”ரோடு மேல ரோடு பில்லு மேல பில்லு”, சாம்பல் மண் சாலை மீது வைக்கோல் பேட்டை அதிகாரிகள் என்ற வாசகம் தற்போது ட்ரென்டிங்காகி வருகிறது.

Share:

இரா. தேவேந்திரன்.

January 31, 2026

Leave a Comment