தமிழ்நாடு அரசு இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும்.
இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்றும் இந்த திட்டத்திற்காக 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அது தவிர பல முக்கிய சிறப்பான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
புகழ் மணக்கும் தாய்த் தமிழ்த் திருநாடு.. திசையெட்டும் கொண்டு சேர்க்கும் திமுக அரசு.
திமுகவின் ஆட்சிக் காலம் என்பது எப்போதுமே தமிழாட்சி காலம் தான். திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தமிழ் மொழிக்கும், தமிழறிஞர்களுக்கும் சிறப்பு சேர்க்கும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
தமிழறிஞர் நூல்கள் நாட்டுடைமை, குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, இலக்கியமாமணி விருதுகள், எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம்.
அமெரிக்காவில் உள்ள ஊஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி உதவி ஜெர்மனி கோலாம் பல்கலைக்கழக தமிழ்த் துறை தொடர்ந்து இயங்க ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி உதவி.
டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் தனித் துறையாக தொடங்க 5 கோடி ரூபாய் நிதி உதவி
திசை தோறும் திராவிடம் , முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்,
தீராக்காதல் திருக்குறள். என ஏராளமான தமிழ்க் காப்புத் திட்டங்களை இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்தி வருகிறது.
நெல்லையில் பொருநை விழா, தஞ்சையில் காவிரி விழா, கோவையில் சிறுவாணி விழா, மதுரையில் வைகை விழா என தமிழர் பெருமையை போற்றும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
கீழடி அருங்காட்சியகம், பொருநை அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம், என தமிழர் பெருமையை போற்றும் அருங்காட்சியகங்கள் அமைப்பு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் சிறப்பு சேர்க்கும் பொற்கால ஆட்சி என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழ் வளர்ச்சியில் தமிழ்நாடு பட்ஜெட்.
2023-24 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம்.
வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்.
தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். சங்கமம் கலை விழாவுக்காக வரும் நிதியாண்டில் ரூ. 11 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு முழுக்க 20 புதிய நாட்டுப்புற கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் 10 கோடி ரூபாயில் புத்தக கண்காட்சி நடத்தப்படும். என பல்வேறு சிறப்பு மிக்க திட்டங்களை அரசு நிதி நிலை அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.