chennireporters.com

கடனை திருப்பி செலுத்தாததால் ஒய்.ஜி. மகேந்திரன் மகள் மதுவந்தி வீட்டுக்கு சீல்.

image credit kollywood Zone

ஒய்.ஜி. மகேந்திரன் மகள் மது வந்தி சென்னை ஆழ்வார் பேட்டை வீனஸ் காலனி 2வது குறுக்குத் தெருவில் வசித்து வருகிறார்.

இவர் சென்னை கிண்டியில் உள்ள ஹிந்துஜா லைலேண்ட் பைனான்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தில் மதுவந்தி ஒரு கோடிய் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

அந்தக் கடனை திருப்பி செலுத்தவில்லை இதுதொடர்பாக இந்துஜா பைனான்ஸ் நிறுவனம் சென்னை பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கின் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டு அட்வகேட் கமிஷனை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் மதுவந்தி வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை.

அதாவது மதுவந்தி சொந்தமான வீட்டை ஜப்தி செய்து சீல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் பேரில் இன்று அவரது வீட்டிற்கு சென்ற நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் ஆழ்வார் பேட்டையில் உள்ள வீட்டிற்கு சீல் வைத்தனர்.

அப்போது மதுவந்தி எனக்கு அசிங்கமாக போய்விடும் அவமானமாகி விடும் தயவு செய்து உங்களை கெஞ்சி கேட்கிறேன் சீல் வைக்க வேண்டாம் என்று கெஞ்சும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கண்ட மதுவந்தி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

அதுதவிர அவர் மீது தனியார் பள்ளிகளில் சீட்டு வாங்கி தருவதாக பணம் மோசடி செய்ததாக மதுவந்தி மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டி
ருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!