chennireporters.com

போலி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தயாரித்து கொடுத்து ஏமாற்றிய இளைஞன் கைது.

அரசு வேலை வாங்கித் தருவதாக பல இளைஞர்களிடம் பணம் பறித்துக் கொண்டு போலியான அரசு ஆணையை வழங்கிய இளைஞன் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ளது நடுகுத்தகை கிராமம் இந்த கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத் என்பவரின் மகன் பார்த்தசாரதி.

பார்த்தசாரதி கடந்த ஆண்டு தமிழக காவல்துறையில் போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வினை எழுதி விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில் பார்த்தசாரதி இடம் தன்னை திருவள்ளூர் மாவட்ட எஸ்பி ஆபீஸில் பணிபுரிந்து வருவதாக சொல்லிக்கொண்டு திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனி பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்ற இளைஞர் பார்த்தசாரதி இடம் நேரில் வந்து பேசினார்.

போலீ அரசு உத்தரவை தயாரித்த அரவிந்தன்

அப்போது எழுத்துத்தேர்வு குறித்து பேசி விட்டு அவருடைய ஹால் டிக்கெட் நம்பர் மற்றும் விவரங்களை வாங்கிச் சென்றுள்ளார்.

பின்னர் சில நாட்கள் கழித்து பார்த்தசாரதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அரவிந்தன் நீங்கள் போலீஸ் தேர்வில் வெற்றி பெறவில்லை இருந்தாலும் பரவாயில்லை.

உங்களுக்கு நான் திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவணப் பிரிவு காப்பகத்தில் அலுவலக உதவியாளராக வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினார் அரவிந்தன் அதை உண்மை என்று நம்பிய பார்த்தசாரதி போலீஸ் வேலை கிடைக்கவில்லை.

என்றாலும் காவல்துறை தொடர்பான வேலை தனக்கு கிடைத்து விடும் என்று எண்ணி அரவிந்தனை நேரில் சந்திக்கும் பொழுது 4 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

பின்னர் அரவிந்தன் சில நாட்கள் கழித்து ஒரு போலியான அப்பாயின்மென்ட் ஆர்டரை தயாரித்து பார்த்தசாரதி இடம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பார்த்தசாரதி தனது உறவினர்களிடம் அதைக் காட்டி விசாரித்துள்ளார்.

அது போலியான ஆடர் என்று தெரிந்துள்ளது இதுகுறித்து அரவிந்த் என்னிடம் கேட்டபோது அரவிந்தன் போனை துண்டித்துவிட்டு பார்த்தசாரதியின் செல் நம்பரை பிளாக் செய்து விட்டார்.

இதுகுறித்து பார்த்தசாரதி திருவள்ளூர் எஸ்.பி. டாக்டர் வருண்குமாரிடம் நேரில் சென்று புகார் அளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட எஸ்.பி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் லில்லி தலைமையில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு வேலை வாங்கித் தருவதாக இளைஞரை ஏமாற்றிய அரவிந்தனை போலீசார் கைது செய்தனர் அரவிந்தன் இதுமாதிரி பல பேரிடம் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியுள்ளார் அரவிந்தன் வீட்டில் இரண்டு செல்போன் 4 சிம் கார்டுகள் .

அரசு வேலைக்கான படிவங்கள் மற்றும் போலி நியமன ஆணைகள் சான்றிதழ்கள் என பல ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர் அதனைத் தொடர்ந்து அரவிந்தனிடம் நடைபெற்ற நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த வருடம் தமிழக ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பித்து இருந்ததாகவும் .

அது தொடர்பாக அடிக்கடி எஸ்பி ஆபீசுக்கு வந்து செல்லும்பொழுது அலுவலக ஊழியர்கள் சிலரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது அரசு ஊழியர்களுடனான படத்தை பயன்படுத்திக்கொண்ட அரவிந்தன் இப்படி போலியான உத்தரவை தயாரித்து 20க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியுள்ளார்.

இதன்பிறகு அரவிந்தனை போலீசார் திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர் இந்த சம்பவத்தில் எஸ்பி ஆபீஸில் உள்ளவர்களுக்கு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

**இது தவிர திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் நண்பர்கள் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மற்றும் ஊர்க்காவல் படையினர் பலர் போலீசார் அவர்களை லஞ்சம் வாங்குவதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பாக *திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையம், *கடம்பத்தூர், *புல்லரம்பாக்கம், *பெரியபாளையம், *செவ்வாப்பேட்டை, பாதிரிவேடு, *கனகம்மாசத்திரம் போன்ற காவல் நிலையங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலிசாக வேலை பார்க்கும் நபர்கள் இரவு நேரங்களில் மணல் திருடுவோர் மற்றும் குற்றங்களில் சம்பவங்களில் ஈடுபடுபவர்களி டம் பணம் வாங்கித் தருகின்றனர்.

குறிப்பாக புல்லரம்பாக்கம் காவல்நிலையத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

எஸ்.பி. வருண்குமார் இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!