chennireporters.com

ராணுவத்தில் இணைந்த இளம் பெண்.

புல்வாமா தாக்குதலில் ராணுவ மேஜர் விபூதி எஸ்.தவுந்தியால் என்பவர் வீரமரணம் அடைந்தார் இந்நிலையில் அவரது மனைவி ராணுவத்தில் இணைந்து பயிற்சியை நிறைவு செய்துள்ளார்  கடந்த 2019ம் ஆண்டு புல்வாமாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்ததாக்குதலில்மேஜர்விபூதிஎஸ்.தவுந்தியால்என்பவரும்வீரமரணம்அடைந்தார்.திருமணமாகி 9 மாதங்களில் அவர் வீரமரணம் அடைந்தார். அப்படியிருக்க அவரது மனைவி நிதிகா கவுல் ராணுவத்தில் இணைந்துள்ளார்.

பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள், ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சி ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் நடந்தது இதில் நிதிகா சவுல் முறைப்படி ராணுவத்தில் இணைக்கப்பட்டார்.

கணவரை இழந்த சோகத்தில் மூழ்கி கிடக்காமல் அடுத்த சில மாதங்களிலேயே ராணுவ பயிற்சியில் சேர்ந்தார் மனைவி நிக்கிதா கவுல் சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அவருக்கு, இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்டர் ஜென்ரல் ஒய்.கே ஜோஷி ஸ்டார்கள் வழங்கி ராணுவத்தில் இணைத்தார்.

நிக்கித கவுல் கூறுகையில், என் கணவர் கடந்து வந்த அதே பயணத்தை நான் அனுபவித்திருக்கிறேன்.அவர் எப்போதும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பார் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.அந்த வீர மங்கைக்கு வீரத்திற்கு நாம் தலை வணங்குவோம் நிக்கிதா கவுலுக்கு ஒரு ராயல் சல்யூட்.

இதையும் படிங்க.!