சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாகூர்மீரான் பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.இவருக்கு சென்னை மேற்கு இளைஞர் காங்கிரஸ் செயலாளராக பதவி வழங்கப்பட்டது.
இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் உள்ள அவரது கள்ளக்காதலி லோகேஸ்வரி என்பவர் வீட்டில் நாகூர் மீரான்.
மது அருந்திக் கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டுக்குள் நுழைந்து நாகூர்மீரானை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
நாகூர் மீரானின் தலையை துண்டாக கொலையாளிகள் வெட்டி எடுத்தனர்.அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
இது தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகூர்மீரான் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி
வைத்தனர்.
இந்நிலையில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் 5 பேர் கொண்ட கும்பல் சரணடைந்தனர்.ராபின், இருள கார்த்திக் , பிரபா, காணிக்கை ராஜ், விமல் என்கிற கருங்குழி சரணடைந்தனர்.
சீனா, பவுல் சாமுவேல் என்கிற 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.இந்தக் கொலை தொடர்பாக ஆதம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது.