3 வது திருமணம் செய்த அன்னபூரணி. ஜோடியாக ஆசீர்வாதம். பரவசமடைந்த பக்தர்கள். தன்னை தானே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் பிரபல பெண் சாமியார் அன்னபூரணி அரசு, இன்று 3வது திருமணம் செய்து கொண்டார். ஆன்மீகத்திற்கு தன்னை அர்ப்பணித்த ரோகித் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இனி இவர்கள் இருவரும் இணைந்து ஜோடியாக அருள் வழங்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர். பிரபல சர்ச்சை பெண் சாமியார் அன்னபூரனி. இவர் தனக்கு தானே கோவில் கட்டி, அந்த கோவிலில் நான் தான் கடவுள் என்று கூறி அருள்பாலித்து வருகிறார். ஏற்கனவே முதல் கணவரை பிரிந்த இவர் அரசு என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அரசு இறந்துவிட்டதால் அவருக்கு சிலை அமைத்து அவரை அன்னபூரனி வழிபட்டு வந்தார்.
இந்த நிலையில் 3வதாக ரோகித் என்பவரை அன்னபூரனி திருமணம் செய்துள்ளார். தெய்வீக திருமணம் என பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர். “லட்சுமி ராமகிருஷ்ணன் “உடைத்த பிறகும்” அன்னபூரணி காலில் விழுவது ஏன்? பெருகும் போலிகள்.. என்ன உளவியல்?” செங்கல்பட்டு மாவட்டத்தில் “அன்னபூரணி அரசு அம்மன்” என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார் அன்னபூரணி. தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு அன்னபூரணி அரசு அம்மனாக தன்னை மாற்றிக்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு தனது கணவர் மற்றும் 14 வயது பெண் குழந்தையை பிரிந்துவிட்டு காதலரான அரசு என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இதில் கணவர் அரசுவும் உயிரிழந்து விட்டதால், அவரது நினைவாக அரசுவின் உருவ சிலையை வடிவமைத்து கடவுளாக வழிபட்டு வந்தார். இதன் பிறகு தான் செங்கல்பட்டில் ‘அன்னபூரணி அரசு அம்மன்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தினார். மேலும் தன்னை கடவுள் என்று கூறி பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி வந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து அன்னபூரணி தனது ஆன்மிக சொற்பொழிவை யூடியூப் மூலமாக நடத்தி வந்தார். மேலும் திருவண்ணாமலையில் கீழ்பென்னாத்தூரில் ராஜா தோப்பு பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அங்கு ஆசிரமம் அமைத்தார். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த இடம் தேடி அலைய வேண்டியிருக்கிறது. இதனால் என்னிடம் இருந்த பணத்தை வைத்து இங்கு தான் இடம் வாங்க முடிந்தது. இனிமேல் இங்கு தான் ஆன்மிக பணியை தொடருவேன். முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பாமே.. அன்னபூரணி செய்த அதகளம்.. சிக்கியது இப்படித்தானாம்..! ” யாருக்கும் அருள்வாக்கு சொல்ல மாட்டேன். ஆன்மிகத்தை மட்டும் தான் சொல்வேன் என்று அன்ன்பூரணி கூறியிருந்தார்.
மேலும் அரசு என் கடவுள் என்று கூறி அவருக்கு சிலை அமைத்ததாகவும் கூறினார். தொடர்ந்து நான் சாமியார் கிடையாது கடவுள் என்று தனக்கு தானே கோவிலை கட்டினார். இந்த கோவிலில் சாமியாக அவரது சிலையையே வடிவமைத்தார். மேலும் பூஜை செய்வது அனைத்தும் தனக்கே செய்துகொண்டார். குறிப்பாக இவர் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்தில், அன்னபூரணியே அம்மன் போல சேலை, அணிகலன்கள் அணிந்து கொண்டு அம்மனாக காட்சியளித்தார். அபிஷேகமும் அம்மன் வேடமிட்டிருந்த அன்னபூரணிக்கே செய்யப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவிலும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு அன்னபூரணி அம்மாவிடம் ஆசி பெற்றனர்.
ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு பாத பூஜை செய்து காலை தொட்டு சூடம் ஏற்றி வழிபட்டனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, “தான் ரோகித் என்பவரை திருமணம் செய்யப் போவதாக சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார். எனது கணவர் அரசு என்பவரை திருமணம் செய்த அதே 28 ஆம் தேதி தான் இந்த திருமணம் நடக்க இருக்கிறது. ரோகித் என்பவரும் ஆன்மிகத்துக்காக தன்னையே அர்பணித்து கொண்டவர் தான்.
திருவண்ணாமலையில் “பெரிய தேர்” வெள்ளோட்டம். ஸ்ரீஅருணாசலேஸ்வரா் ரதத்தை காண குவிந்த பக்தர்கள்” மேலும் அன்றைய தினம் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆசிர்வாதம் பெற்று செல்லுங்கள்” என்று கூறியிருந்தார். அதன்படி இன்று அன்னபூரணி – ரோகித் திருமணம் நடைபெற்றது. இது அன்னபூரணிக்கு 3 வது திருமணம் ஆகும். தெய்வீக திருமணம் என்ற பெயரில் திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூரில் இவர்களது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணம் முடிந்த நிலையில், இனி இவர்கள் இருவரும் இணைந்து ஜோடியாக பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.