chennireporters.com

#Avadi Sub-Registrar Office; ஐஜி அந்தஸ்து பெற்றாரா? ஆவடி சப்ரிஜிஸ்டர் அலுவலக தலைமை எழுத்தர் சிவசங்கர்!.

ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வரும் தலைமை எழுத்தர் சிவசங்கர் என்பவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கியுள்ளன. இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் அவர்களுக்கும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கும் பல புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. சிவசங்கர் 2018 ஆம் ஆண்டு ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு தலைமை எழுத்தராக பணிக்கு வந்தார்.New Collector takes charge - The Hindu

பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ்

பணிக்கு வந்த நாள் முதல் வில்லங்கச் சான்று வழங்குவதற்கு 100 ரூபாயும் ஆவணத்தின் நகலை பெறுவதற்கு 200 ரூபாயும் கொடுத்தால் மட்டும்தான் விண்ணப்பத்தையே பெற்றுக் கொள்வார் இல்லையென்றால் விண்ணப்பத்தை பெற மாட்டார்.ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் திடீர் ஆய்வுபதிவுத் திருமணம் செய்பவர்கள் கண்டிப்பாக 2000 ரூபாய் தர வேண்டும் இல்லையென்றால் ஆவணங்கள் சரியில்லை என்று திருப்பி அனுப்பி விடுவார். தற்போது ஆவடியில் சார் பதிவாளர்கள் இல்லாததால் இவர் தற்காலிக சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். ஒரு ஆவணத்தை பார்ப்பதற்கே ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளுகிறார் அவர்கள் கட்டிங் கொடுத்தால் மட்டும்தான் அந்த பத்திரம் பதிவுக்கு ஏற்கப்படும் இல்லை என்றால் நிராகரித்து விடுவார்.

பத்திர பதிவுத்துறை தலைவரின் உத்தரவு என்னவென்றால் பதிவு செய்யும் ஆவணங்களை அன்றே தர வேண்டும். ஆனால் இவர் பத்திரத்தை உடனடியாக தராமல் பொதுமக்களை அலைக்கழிப்பதிலும் மரியாதை குறைவாகவும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தனக்கு தேவையான லஞ்சப் பணத்தை கொடுத்தால் மட்டும்தான் பதிவு செய்த பத்திரத்தை அன்றே தருவார். இல்லையென்றால் ஒரு வாரம் கழித்து தான் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பத்திரம் கொடுப்பார்.ஆவடி பத்திரப்பதிவு தலைமை எழுத்தர் சிவசங்கர்

அரசு உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாக தான்தோன்றித்தனமாக ஆவடி அருகே உள்ள மோரை, வெள்ளானுர், பாலவேடு ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்களின் வழிகாட்டு மதிப்பை அதாவது ஏற்கனவே 550 ரூபாய் வழிகாட்டு மதிப்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர் தற்போது 800 ரூபாயாக வழிகாட்டி மதிப்பை உயர்த்தியுள்ளார். இதற்கு அரசு எந்த உத்தரவும் போடவில்லை, எந்த அடிப்படையில் இவர் வழிகாட்டு மதிப்பை உயர்த்தினார் என்று சம்பந்தப்பட்ட ஆவண எழுத்தாளர்களோ, வழக்கறிஞர்களோ கேள்வி கேட்டால் அதற்கு ஏதும் பதிவில் சொல்லாமல் அவர்களது பத்திரங்களை பதிவு செய்யாமல் நிராகரித்து விடுவார்.

இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். எனவே பத்திரப்பதிவுத்துறை தலைவர் உடனடியாக ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு உரிய சார் பதிவாளரை நியமிக்க வேண்டும். சார்பதிவாளர் இல்லாததால் தான் சிவசங்கர் தன்னுடைய இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டு வருகிறார். எனவே அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை வேறு ஒரு அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும். அவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பத்திரப்பதிவுத்துறை எழுத்தாளர்.

தலைமை எழுத்தர் சிவசங்கர் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை லஞ்சமாக தனது வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார். ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆவடி பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் இரண்டு மூன்று முறை சோதனை நடத்தி இருக்கிறது எனவே இந்த பொங்கல் திருநாட்களில் ஒரு ரவுண்டு சோதனை நடத்தினால் சிவசங்கரை போல உள்ள சில லஞ்சப் பேர்வழிகள் புழலுக்குப் போகும் சூழல் ஏற்படும் எனவே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆவடி பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்த வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

இதையும் படிங்க.!